பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து உலகளவில் ஆதரவைப் பெற்ற இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானை ஆதரித்த சில நாடுகளில் துருக்கி முக்கியமான நாடு.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ்தளப்பதிவில், "பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான முன்னேற்றங்களை நாங்கள் கவலையுடன் கண்காணித்து வருகிறோம். மே 6 இரவு இந்தியா நடத்திய தாக்குதல் ஒரு முழுமையான போரின் அபாயத்தை எழுப்புகிறது. இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், பொதுமக்கள், உள்கட்டமைப்பை குறிவைக்கும் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம் எனத் தெரிவித்து இருந்தது.
துருக்கி வெளியுறவு அமைச்சகம் இரு தரப்பினரையும் “பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும்” என்று அழைப்பு விடுத்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடனம்... துருக்கிக்குள் புகுந்து இஷ்டத்துக்கு ஆடும் இஸ்ரேல்..!

“இந்திய- பாகிஸ்தான் பகுதிகளில் பதட்டங்களைக் குறைக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயங்கரவாத எதிர்ப்புத் துறை உட்பட தேவையான வழிமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று அவர்கள் மேலும் கூறினர்.
பாகிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததற்காக உலகளாவிய ஆதரவைப் பெற்ற இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானை ஆதரித்த சில நாடுகளில் துருக்கியும் ஒன்று. தாக்குதலுக்குப் பிறகு அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
"இந்திய குடியரசுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரிப்பது குறித்து அஜர்பைஜான் குடியரசு தனது கவலையை வெளிப்படுத்துகிறது" என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், "பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். பாகிஸ்தான் மக்களுடன் ஒற்றுமையுடன், அப்பாவி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், துருக்கிய செஞ்சுரி என்கிற எக்ஸ்தள பதிவில், ''ஒரே ஒரு போன்கால்... வணக்கம் கராச்சி'' என்கிற தலைப்பில்'' பல போர்கப்பல்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுப்பதாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
1 phone call and... Good morning #Karachi! 🇵🇰🤝🇹🇷 pic.twitter.com/0TjZPEfPW3
— Turkish Century (@TurkishCentury) May 8, 2025
மற்றொரு பதிவில், ''ஏய், எங்களுக்கு கொஞ்சம் விட்டுடு! 1974-ல் கிரேக்கர்களைத் தாக்கி சைப்ரஸின் பாதியைக் கைப்பற்றியதில் இருந்து எங்களுக்கு நல்ல கடற்படை தரையிறக்கம் கிடைக்கவில்லை. இப்போது நாம் கால்களை நீட்ட வேண்டிய நேரம் இது'' என்று சவால் விட்டுள்ளது.
Hey, leave some for us!
We haven't had a good naval landing since we smacked the Greeks and took half of Cyprus in 1974. It's time to stretch our legs. 🪖❤️ pic.twitter.com/MPcrHtWimm
— Turkish Century (@TurkishCentury) May 8, 2025
மற்றொரு பதிவில், ''ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கடற்படை தரையிறங்கும் திறனை துருக்கியே கொண்டுள்ளது. இவை அனைத்தும் இஸ்லாமாபாத்தின் வசம் உள்ளது.'' என்று தெரிவித்துள்ளது.
Türkiye has the largest naval landing capability in Europe. All of it at Islamabad's disposal. ⚓️🇵🇰 pic.twitter.com/4tL0WJSl4f
— Turkish Century (@TurkishCentury) May 8, 2025
இன்னொரு பதிவில், ''காத்திருக்க முடியாது. அவர்களை இன்னும் கடுமையாக தாக்குங்கள். அப்போதுதான் அவர்களின் பதில் பெரிய படகுகளை வெளியே கொண்டு வருவதற்கான சாக்குப்போக்கை நமக்கு வழங்கும். எங்களுக்கு ஒரு பிரபலமான பழமொழி உண்டு: போர் என்பது துருக்கியர்களின் கொண்டாட்டம்'' எனப் பதிவிட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளுக்கான நேட்டோ போன்ற இராணுவ கூட்டணி அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும், துருக்கியும் தலைமை தாங்க வேண்டும்'' எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
Can't wait!
Hit them harder so that their response will give us the excuse to bring out the big boats.
We have a famous saying: Savaş Türk'ün düğünüdür. (War is Turk's celebration.) pic.twitter.com/I1WPT4usLp
— Turkish Century (@TurkishCentury) May 8, 2025
துருக்கியும், பாகிஸ்தானும் வலுவான ராஜதந்திர உறவுகளின் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பெரும்பாலும் இராணுவ, முக்கிய பிரச்சினைகளில் ஒத்துழைக்கின்றன. நேட்டோ பேச்சுவார்த்தை யூரோ-அட்லாண்டிக் பேரிடர் மறுமொழி ஒருங்கிணைப்பு மையம் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட 2005 பூகம்ப உதவி போன்ற கடந்தகால பேரிடர் ஒத்துழைப்பு மூலம் பாகிஸ்தான் - துருக்கி கைகோர்த்து வருகின்றன.
"காலை வணக்கம்கராச்சி!" என்ற சொற்றொடர், அந்த எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள், இந்தியாவின் ட்ரோன் சம்பவத்தைத் தொடர்ந்து துருக்கியின் ஆதரவை இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர, இராணுவ செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: படம் போட்டு காட்டிய இந்தியா.. ஆதாரத்தோடு சிக்கிய பாக்., இப்போ என்ன சொல்ல போறீங்க?