தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என் விஜய் அறிவித்து உள்ளார். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விஜய், இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளதாகவும், வரும் ஐந்தாம் தேதி (நவம்பர் 5) புதன்கிழமை அன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
இதையும் படிங்க: ஜாமின் கேட்ட தவெக நிர்வாகி... முடியவே முடியாது... கறார் காட்டிய நீதிமன்றம்...!
இந்த நிலையில், தேர்தல் பணிகளை இன்னும் தீவிரப்படுத்தும் முயற்சியாக, 234 தொகுதிகளை 10 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நியமித்துள்ளார். தேர்தல் வரை கட்சிப் பணிகளை தீவிரப் படுத்த மாவட்ட செயலாளர்களின் பணிகளை கண்காணிக்க மண்டலத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள் விஜயின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பிறகு பிரச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளை மண்டல பொறுப்பாளர்கள் மேற்கொள்வர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிஸ் ஆகக் கூடாது... விஜயின் கரூர் பயண ஏற்பாடுகள் செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு...!