ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் தடம் புரண்டு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஜார்க்கண்டில் இருக்கக்கூடிய சாந்தில் ஜங்ஷன் என்கிற ரயில் நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 4:00 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று டாடா நகர் பகுதியிலிருந்து புரூலியவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலானது சாண்டில் ரயில் நிலையத்தை கடந்த போது திடீரென தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அந்த ரயில் மீது எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயில்மோதி விபத்துக்கு உள்ளானது.
இதனால் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் எதிரே வந்த ரயில் மீது மோதியதில் அதன் பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன. கிட்டத்தட்ட இரண்டு ரயில்களையும் சேர்த்து சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருக்கிறது. இந்த ரயில் விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பித்துகி ரயில்வே கேட்டுட்டுக்கும் சாந்தில் என்கிற ரயில் நிலையத்திற்கும் இடையே தான் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ள மீட்பு படையினர், இடிபாடுகளையும் ரயில் பெட்டிகளையும் அகற்றி வருகின்றனர். இந்த விபத்து எப்படி நடைபெற்றது என்பதை இதுவரை தெரியவில்லை. இருப்பினும் அது குறித்த முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனக்கூறப்படுகிறது. தற்போது முழு வீச்சில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் நல்வாய்ப்பாக எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை ஆனால் பெரும் பொருட்சேதம் மட்டும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரயில் விபத்து: எதுக்காக சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கல? மனித உரிமைகள் ஆணையம் கேள்வி..!
இதையும் படிங்க: பற்றி எரிந்த சரக்கு ரயில்.. ஒரே நாளில் இத்தனை கோடி நஷ்டமா? - லேட்டஸ்ட் அப்டேட்..!