சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால்கெடுவை பிப்ரவரி 18ம் தேதிவரை நீட்டித்து யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை யுபிஎஸ்சி ஆண்டுதோறும் 3 நிலைகளில் நடத்துகிறது. முதனிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நடத்துகிறது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பணிகளுக்கு இந்த தேர்வுகள் மூலம்தான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள், இந்திய வனத்துறை முதனிலைத் தேர்வு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை வரும் 18ம் தேதிவரை நீட்டித்து யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
வரும் 18ம் தேதி விண்ணப்பங்களை அனுப்பும் கால்கெடு முடிந்தபின், 7 நாட்கள் வரை திருத்தம் செய்யும் காலக்கெடு அறிவிக்கப்படும். அதாவது, 19ம் தேதி முதல் 25ம் தேதிவரை திருத்தம் செய்யும் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் மட்டுமல்ல... நாட்டின் 4 பெரிய மாநிலங்களிலும் பூஜ்ஜியம்… பரிதாபத்தில் காங்கிரஸ்..!
இதற்கு முன் விண்ணப்பங்களை அனுப்பும் காலக்கெடு வரும் 11ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆதலால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், upsconline.gov.in என்ற இணையதள முகவரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் காலக்கெடு ஏன் நீட்டிக்கப்பட்டது என்பது குறித்து யுபிஎஸ்சி எந்த விளக்கமும் அறிவிக்கவில்லை அதேசமயம் இணையதளத்தி் விண்ணபிக்கும்போது சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வு மே 25ம் தேதி நடக்கிறது. இந்த முறை 939 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் 38 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு முழுக்கு... மாநில அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம்... காங்கிரஸின் புதிய முடிவு