வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் உத்தரகாசி பகுதியில் மீகு வெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்ததால் அப்பகுதியில் ஒரு குலைந்து காணப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் தாராளி பகுதியில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராளப் பகுதியில் இன்று திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஏராளமான பொதுமக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பலர் மண்ணில் புதையுண்டு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் ராணுவம், தீயணைப்பு வீரர்கள், மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் காண்போரை கதி கலங்க செய்கிறது.
இதையும் படிங்க: இயற்கை பேரிடரால் உருக்குலைந்த 6 மாநிலங்கள்.. ரூ.1,067 கோடி நிதி விடுவித்த மத்திய அரசு..!
குடியிருப்புப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டதில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள உயரமான இடங்களுக்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். நீருடன் மணலும் கலந்து அடித்துச் சென்றதில் குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை இருந்த இடம் தெரியாமல் உருக் குலைந்து போனது.
ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெக்சாஸை ஆட்டம் காண வைத்த பேய் மழை, வெள்ளம்.. எகிறும் பலி எண்ணிக்கை..! தவிக்கும் மக்கள்..!