இந்தியாவில் உணவுப் பொருள்களின் பொட்டலங்களில் பச்சைப் புள்ளியோ சிவப்புப் புள்ளியோ போட வேண்டும் என்கிற விதி 2006-லிருந்தே உள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்ட அந்த அறிவிப்பின்படி, சைவ உணவுப் பொருள்களுக்கு பச்சைப் புள்ளியும், அசைவ உணவுப் பொருள்களுக்கு சிவப்புப் புள்ளியும் இருக்க வேண்டும். இது இன்று வரை கட்டாயமாகவே உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குறியீடு போதுமானதல்ல, மிகத் தெளிவாக இல்லை என்ற குரல்கள் எழுந்தன.
குறிப்பாக, முட்டை சைவமா அசைவமா என்கிற குழப்பமும், பால் பொருள்களில் முட்டை சேர்க்கப்படும் சில இனிப்புகளை சைவ உணவாகக் காட்டுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.இந்நிலையில் 2024-25இல் FSSAI மீண்டும் இந்த விதியை மறு ஆய்வு செய்து, குறியீட்டை மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் “Non-Veg” என்று எழுத்து வடிவிலும் குறிப்பிடலாம் என்று அனுமதி அளித்தது.

சைவ உணவகங்களிலோ ஆன்லைன் உணவு ஆர்டர்களிலோ “Veg Only” என்று காட்டும் போது, தவறுதலாக அசைவப் பொருள் கலந்து வந்த வழக்குகள் அதிகரித்தன. இதனால் சைவ உண்பவர்களிடையே பெரும் ஆத்திரமும் நம்பிக்கைத் துரோக உணர்வும் ஏற்பட்டது. இதனிடையே பதப்படுத்தி பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் சைவ-அசைவ குறியீடு கட்டாயம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுல இதுதான் ஃபர்ஸ்ட் H2 கப்பல்..!! தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்..!!
ஊட்டச்சத்து, சேர்க்கப்பட்டுள்ள உணவுப் பொருள்கள், பேட்ச் எண், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் இடம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உணவுப் பொட்டலங்களில் உள்ள தகவல்களைப் பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!