கரூர் சம்பவத்தை மையப்படுத்தி பொன்னேரியில் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர் கலாட்டா. கடந்த வாரம் விஜயை கைது செய்ய கோரி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் இன்று விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்மையில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3ஆம் தேதி பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் விஜயை கைது செய்ய வேண்டும் என போஸ்டர்களை ஒட்டினர். தமிழக அரசே கரூரில் பொதுமக்கள் படுகொலைக்கு காரணமான விஜயை கைது செய், பொதுமக்களே திரைப்பட மாயைகளுக்கு பலியாகாதீர் என்ற வாசகங்களுடன் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் சார்பில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.
இதையும் படிங்க: நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க... இபிஎஸுக்கு டெல்லி கொடுத்த புது அசைன்மெண்ட்...!
இந்நிலையில் இன்று விஜய்க்கு ஆதரவாக அக்கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும், எந்த சூழ்நிலையிலும் உங்களுடன் நிழலாக நாங்கள் தலைவா என்ற வாசகங்களுடன் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொன்னேரி சுற்றுப்பகுதிகளில் அக்கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
கடந்த வாரம் தவெக தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டிய நிலையில் இன்று விஜய்க்கு ஆதரவாக அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கரூர் சம்பவத்தை மையப்படுத்தி போட்டி போட்டு கொண்டு விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர் கலாட்டாவாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் செல்லும் விஜய்... பாதுகாப்பு கொடுங்க... மனு கொடுத்த தவெக...!