நாளைய சமுதாயம் வளமானதாக அமைய ஆசிரியர்களின் பங்கு அளப்பறியதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்ததாகவும், கடவுளுக்கே முதன்மையானவராகவும் பார்க்கபடுகிறவர்கள் ஆசிரியர்கள் தான். வகுப்பில் ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியே கண்காணித்து அவர்களின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறவர்கள் ஆசிரியர்கள்.
பெற்றோர் தங்களது குழந்தைகளை மட்டுமே கண்ணும் கருத்துமாய் வளர்ப்பார்கள். ஆனால் ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைவரையும் தனது பிள்ளைகளை போல் நினைத்து, அனைவருக்குமாய் உழைப்பார்கள். இத்தகைய பெருமை மிகுந்த ஆசிரியர்கள் சமீப காலமாக நடத்தபடும் நிலை மிகவும் கவலை அளிக்கிறது.

உலகளாவிய கொரோனோ பெருந்தொற்று காலத்தில், உலக மக்கள் அனைவரும் பொது முடக்கத்தை சந்தித்தாலும், அப்போதும் ஆசிரியர்கள் தங்களது பணிகளை தொடர்ந்தனர். இந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் மனநிலையில் மாற்றம் நிக்ழந்திருப்பது உண்மை.
இணைய கலாச்சாரத்தின் பின்னணியில் வேகமாக ஓடும் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க தவறுகின்றனர். எப்போதும் போனிலே முடங்கி கிடக்கும் மாணவர்கள், அதை தாண்டி வெளியில் உள்ளதை பார்க்க வேண்டும் என்றே பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த அந்தந்த பள்ளி, கல்லூரி சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் 100 மாடுகள் இறப்பு? வெளிவரத் துவங்கும் தேவஸ்தான முறைகேடுகள்..!

இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் செல்போன் பயன்படுத்திய மாணவியிடம் இருந்து பேராசிரியை செல்போனை பறிமுதல் செய்ததுக்காக, அனைவரின் முன்னிலையிலும் மாணவி ஒருவர் பேராசிரியரை காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்த மாணவியை கண்டித்து செல்போனை ஆசிரியர் பிடிங்கி தன்னிடம் வைத்து கொண்டார்.
இதனால் கோபமடைந்த மாணவி செல்போனை திருப்பி தர சொல்லி ஆசிரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாணவி - ஆசிரியர் இருவரும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அந்தப் போனோட விலை ₹ 12,000. நீ எப்படி என் போன் எடுப்பாய் எனும் ஆசிரியை ஆபாச வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்தார்.

மாணவியை அங்கிருந்த ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை வீடியோ பதிவு செய்த சிலர் சமூக வளைதளத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில் மாணவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு குறைந்த பட்ச ஒழுக்கத்தையாவது கற்றுத்தர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதமறுப்பு திருமணம் செய்த மகள்.. நாடகமாடி வீட்டிற்கு வரவழைத்து கொலை..? கதறி அழும் கணவன்..!