தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (அக். 28) முதல் தொடங்குகிறது. இதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்தும் இந்தப் பணி, 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று (அக். 27) டெல்லியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
பீஹாரில் சமீபத்தில் நடந்த சிறப்பு திருத்தத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தப்படும் இரண்டாவது கட்டப் பணி இது. தமிழகம், கேரளா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், கோவா, அந்தமான் & நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 12 இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய திருத்தங்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
இந்தப் பணிக்காக 5.33 லட்சம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) மற்றும் 7 லட்சம் அரசியல் கட்சி முகவர்கள் (பி.எல்.ஏ.) ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று மூன்று முறை சரிபார்ப்பு செய்வார்கள். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் சப்-கலெக்டர் அந்தஸ்துள்ள தேர்தல் பதிவு அலுவலர் (ஈ.ஆர்.ஓ.) நியமிக்கப்படுவார். அவர் வரைவு பட்டியலைத் தயாரித்து, கோரிக்கைகள், எதிர்ப்புகளைத் தீர்ப்பார்.
இதையும் படிங்க: கொங்கு பெல்ட் எங்களுக்கு கொடுங்க! அதிமுகவுடன் பாஜக போட்ட ரகசிய டீல்!

ஆதார் அட்டை அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்படும். பிரதிநியமான படிவங்கள் வழங்கி விபரங்கள் சரிபார்க்கப்படும். போலி பெயர்கள் நீக்கப்படும். இறுதி பட்டியல் வெளியான பின் குறைகள் தெரிவிக்கலாம். அசாமில் தனி அறிவிப்பு இருக்கும், ஏனெனில் அங்கு குடிமகன் பதிவு பணிகள் நடக்கின்றன.
கால அட்டவணை:
- அச்சடிப்பு & பயிற்சி: அக். 28 முதல் நவ. 3 வரை.
- சரிபார்ப்பு: நவ. 4 முதல் டிச. 4 வரை.
- வரைவு பட்டியல்: டிச. 9.
- கோரிக்கைகள்/எதிர்ப்புகள்: டிச. 9 முதல் 2026 ஜன. 8 வரை.
- குறைதீர்ப்பு: டிச. 9 முதல் ஜன. 31 வரை.
- இறுதி பட்டியல்: 2026 பிப். 7.
வாக்காளர் தகுதிகள்:
- இந்திய குடிமகன்.
- 18 வயது பூர்த்தி.
- தொகுதியில் வசிப்பு.
- சட்ட ரீதியாக தகுதியிழப்பு இல்லை.
21 ஆண்டுகளுக்குப் பின் (2002-04க்குப் பின்) இத்தகைய பெரிய அளவிலான திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 2026 தேர்தலுக்கு (தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி) இது முக்கியமானதொரு காலகட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதுதான் ப்ளான் மிஸ் பண்ணிடாதீங்க! இபிஎஸ்-யிடம் பாஜக தலைவர்கள் கொடுத்த ப்ளூ பிரிண்ட்!