தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரங்களை தொடங்கி உள்ளதோடு, கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி ‛சார்' எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR or Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கனவே பீகார் மாநிலத்தில வாக்காளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணயம் மேற்கொண்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறித்தாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது. ஆனாலும் பீகாரில் சார் நடைமுறையை பயன்படுத்தி இரண்டு கட்டங்களாக தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேபோ தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: SIR ஒரு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த விசிக வலியுறுத்தல்...!
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்தக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியை பாஜக அரசு பின்பற்ற முயற்சிப்பதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமானால் அதனை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்ந்து நடைபெற இருக்கக்கூடிய நிலையில், அந்த மாநிலங்களில் முதற்கட்டமாக இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனக்கூறப்படுகிறது. தமிழகத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 4:15 மணிக்கு டெல்லியில் நடைபெறக்கூடிய தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பில் வெளியாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் SIR... பாஜக அழுகுணி ஆட்டம் எங்க கிட்ட பலிக்காது... திமுக விளாசல்...!