மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவின் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 73 வழக்குகள் விசாரணை இன்று தொடங்கியது. அப்போது வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் வக்பு சொத்தை முடிவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பினர். இனிமேல் இஸ்லாமியர்களை இந்து வாரியங்களில் அனுமதிப்பீர்களா எனவும் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். மேலும், வக்ஃபு திருத்த மசோதாவில் மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பேச்சளவில் தான் சிறுபான்மையினர் பிரச்சனையா? நம்பிய மக்களுக்கு இதுதான் நிலைமையா? திமுகவை சுளுக்கெடுத்த விஜய்..!.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான நீதிபதிகளில் அமர்வு வக்கு சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் மனுக்களை விசாரித்தது. அப்போது, வக்பு திருத்தச் சட்டத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கின் விசாரணையை மே 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மோடி: நன்றி தெரிவித்த 'தாவூதி போஹ்ரா' பிரதிநிதிகள்