போர் நிறுத்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அதிகாரிகள், சண்டையை உடனடியாக நிறுத்துவது என்ற பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு செய்யப்பட்டது.வான், கடல் மற்றும் தரை வழியாகவும் ராணுவ நடவடிக்கை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தவறான பிரச்சாரம் குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம். பிரம்மோஸ் ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்., எஸ் 400 ஏவுகணையை வீழ்த்தினோம் என பாகிஸ்தான் கூறியது தவறு. இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ, விமானப்படைத்தளங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது தவறு. பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் தற்காப்புத் திறன்களை நாங்கள் அழித்து விட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: #BIG BREAKING: அமெரிக்காவால் போர் நிறுத்தமா? இந்தியா மறுப்பு...