உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆண்டு இதுவரை போதிய மழையில்லாததால் திருமலையில் உள்ள அனைகளில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போதுள்ள தண்ணீர் இன்னும் 100 நாட்களுக்கும் குறைவான அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் தண்ணீரை சேமிக்க தேவஸ்தான அதிகாரிகள் புது உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி குழாய்களில் நீரின் வெளியேற்றம் அழுத்தத்தைக் குறைக்கப்பட உள்ளது.
பக்தர்கள் தங்கும் காட்டேஜ்களில் உள்ள ஃப்ளஷ் டேங்குகளின் இணைப்பைத் துண்டித்தல், ரூ 100 கட்டணத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் அறைகளுக்கு இனி ஒரு குழாய்க்கு மட்டும் நீர் விநியோகத்தைக் வழங்கப்பட உள்ளது.
தூய்மை பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்தாமல் சுத்தம் செய்யுமாறு சுகாதாரத் துறையை வலியுறுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் மடங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ( காலையில் இரண்டு மணி நேரம் மற்றும் மாலையில் இரண்டு மணி நேரம் ) மட்டுமே நீர் விநியோகம் செய்யப்படும்.
இதையும் படிங்க: மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!
தேவைப்படும் மடங்களில் திருப்பதியிலிருந்து தனியார் டேங்கர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. குளியலறைகளில் பெரிய பக்கெட்டிற்கு பதிலாக சிறிய பக்கெட் மற்றும் மேக் பயன்படுத்த வேண்டும். கை கழுவுவதற்கு அதிகபட்ச நீர் பயன்படுத்தப்படும் இடங்களில் உதராணத்திற்கு அன்னபிரசாத மையம், ஊழியர் உணவகம், கோயில், யாத்திரிகள் சமுதாய கூடம் மற்றும் தேவைப்படும் பிற இடங்களில் அதிக நீர் வெளியேறும் குழாய்களுக்குப் பதிலாக குறைந்த அளவு நீரை வெளியேற்றும் குழாய்களைப் பொருத்த வேண்டும்.
நன்கொடையாளர் மூலம் உள்ள காட்டேஜ்களின் கட்டுமானப் பணிகளுக்கான நீர் விநியோகத்தை நிறுத்தவும் அவர்கள் விரும்பினால், திருப்பதியிலிருந்து தனியார் டேங்கர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தேவஸ்தானம் சார்பில் மழை வேண்டி மூன்று நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
கடந்த 9ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்திற்கு பிறகு தலைவர் பி.ஆர். நாயுடு 120 நாட்களுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் பற்றக்குறை இல்லை என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் 20 நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் தங்கும் அறைகளில் குழாய் இணைப்பு துண்டிப்பதும், ஓட்டல்கள் மற்றும் மடங்களுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: திக்... திக்... சம்பவம்...!! - 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை... சோகத்தில் முடிந்த 10 மணி நேர மரண போராட்டம்...!