தர்மபுரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கோவேந்தன் தாயாரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீண்ட நாட்களாக ஊர் பெயர்களில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.ஊர் பெயரில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனாலும் சில கிராமங்களில் ஊர் பெயரை மாற்றுவதில் சில நிர்வாக சிக்கல் உள்ளது. நான் சமூக நீதி துறை அமைச்சாரனவுடன் பறை சேரியில் இருந்து வந்த மக்கள் மனு கொடுத்திருந்தனர்.
அந்த ஊர் பெயர் அச்சம் தவிர்த்தான் என இருந்தது. அதுதான் அரசு பதிவில் உள்ளது. துறை ரீதியாக மாவட்ட கலெக்டருக்கு அரசாணை அனுப்பப்பட்டது. இந்த ஆணை அனைத்து ஊர்களுக்கும் பொருந்தும்.சக்கிலிப்பட்டி,பறையப்பட்டி போன்ற அனைத்து சாதி ரீதியிலான பெயர்கள் தமிழ்நாட்டில் இருப்பது என்பது இழிவு. அதை நீக்கம் செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு. அதன் பெயரில் அடுத்தடுத்த ஊர்களுக்கான பெயர்கள் நீக்கும் அரசாணை பிறப்பிக்கப்படும்.
இதையும் படிங்க: மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?... வன்னியரசு மன்னிப்பு கேள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி...!
ஆர்.டி.ஐ.,விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட உடனே திருமாவளவன் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார். வெளிப்படை தன்மைக்கு எதிரானது. அதனால்தான் திருமாவளவன் அவர்கள் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது இதனால் அரசு அதை திரும்ப பெற்றுள்ளது.
பிடிவாதம் இல்லாமல் மக்களின் குரலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. இடதுசாரி கட்சிகள் மக்களுடன் நெருக்கமாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தவறு என சுட்டிக்காட்டியதை வாபஸ் பெற்றது வரவேற்க்கதக்கது.இது முதலமைச்சரின் முதிர்ச்சியை காட்டுகிறது. மதுராந்தகம் தாராபுரம் இரு தொகுதியிலும் தா.வெ.க.வெற்றிபெரும்.ரிசல்ட் வந்தவுடன் அது தெரியும்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக இடதுசாரிகள் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே விடுதலை சிறுத்தைகள் முடிவு எடுக்கும் என்று திருமாவளவன் கூறினார். எல்லாமே முடிவெடுப்போம் என்று கூறவில்லை.தவெகவுகாகு ஆதரவு கொடுப்பது தொடர்பாக எடுக்கும் முடிவை யொட்டி எடுப்போம் என்று கூறினோம் அதே முடிவை எடுப்போம் என்று கூறவில்லை.
தமிழகத்தில் அதிக அளவு திரிபு வாதிகள் திரித்து பேசுகிறார்கள்.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடது சாரி கட்சிதான். எங்கள் கட்சியை தெரிவித்துக் கொள்வது சிறுமைப்படுத்துவது போல நினைக்கின்றோம். எங்கள் மீது அவதூறு பரப்பவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக மறைமுகமாக தவெகவுக்கு பாமக ஆதரவு கொடுக்கிறது.அதனால் தான் அதிமுக வுக்கு பாமக ஆதரவு கொடுக்க வில்லை என சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி வருகிறது.
இடைத் தேர்தலுக்குப் பின்பு அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறது அமைச்சரவையில் பாமக சௌமியா அன்புமணி அமைச்சராக போகிறார் என உலா வரும் செய்தி குறித்து கேட்டபோது:
இது போன்ற தகவல்கள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும் எங்களுக்கு தெரியாது என்றார்.
இதையும் படிங்க: இந்த ஆதாரம் போதுமா?... வன்னியரசு தலையில் இடியை இறக்கிய பாரதிதாசன் ... புதிய வீடியோவால் பரபரப்பு