அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு திட்டத்தை அமல்படுத்தி, இந்தியா மற்றும் சீனாவை குறிவைச்சு புது வரி நடவடிக்கைகளை அறிவிச்சிருக்கார். இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குறதை நிறுத்தாததால, ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிச்சு, கூடுதலா ரஷ்ய எண்ணெய் வாங்குறதுக்கு “பெனால்டி” வரியும் விதிச்சிருக்கார்.
அதே மாதிரி, சீனாவுக்கும் ரஷ்யாவோட வர்த்தகத்துக்கு கூடுதல் வரி விதிச்சிருக்கார். இதோட, ரஷ்யா-உக்ரைன் போரில் ஆகஸ்ட் 9-க்குள் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லைனா, ரஷ்யா மீது 100% வரியும், கடுமையான வர்த்தக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்னு ட்ரம்ப் எச்சரிச்சிருக்கார். இந்த மிரட்டலுக்கு ரஷ்யா கடுமையா பதிலடி கொடுத்து, உலக அரங்கில் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு போயிருக்கு!
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ட்ரம்போட இந்த எச்சரிக்கைக்கு காட்டமா பதில் சொல்லியிருக்கார். “அமெரிக்காவோட சட்டவிரோதமான, ஒரு தலைப்பட்சமான வரி விதிப்புக்கு ரஷ்யா எப்பவும் பணியாது. அமெரிக்காவை எதிர்த்து நாங்க உறுதியா நிப்போம்.
இதையும் படிங்க: ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! தாக்குமா சுனாமி!! அச்சத்தில் மக்கள்!!
அமெரிக்கா, புது காலனித்துவ முறையில உலகை கட்டுப்படுத்த பாக்குது. இந்தப் போக்கை எங்களால ஏத்துக்க முடியாது,”னு மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தீர்க்கமா பேசினார். இந்த பதிலடி, ரஷ்யா-அமெரிக்கா இடையே மறுபடியும் பனிப்போர் மாதிரியான பதற்றத்தை உருவாக்கியிருக்கு.

ட்ரம்ப், தன்னோட ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவோட எண்ணெய் வாங்குறது, உக்ரைன் போரை நிறுத்த விரும்புற உலக நாடுகளுக்கு எதிரான செயல். இந்தியா நம்ம நண்பர்களாவே இருக்கலாம், ஆனா அவங்க அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கிற வரிகள் உலகத்துலயே அதிகமா இருக்கு. ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களையும், எண்ணெயையும் வாங்குறாங்க.
இதனால 25% வரியோட கூடுதல் பெனால்டியும் விதிக்கப்படும்,”னு பதிவு போட்டு இந்தியாவை கடுமையா விமர்சிச்சார். இந்தியாவோட கச்சா எண்ணெய் இறக்குமதியில் 35% ரஷ்யாவிடம் இருந்து வருது, இது உலக சந்தையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதால, இந்தியா இந்த வர்த்தகத்தை தொடருது.
இந்திய வர்த்தக அமைச்சகம், “ட்ரம்போட வரி அறிவிப்பை ஆராய்ந்து வர்றோம். இந்தியாவும் அமெரிக்காவும் நியாயமான, பரஸ்பர நன்மை தரக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க உறுதியா இருக்கோம்,”னு அறிக்கை விட்டிருக்கு. இந்திய அதிகாரிகள், “ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துறது சுலபமில்லை, இது நீண்டகால ஒப்பந்தங்களை அடிப்படையா வைச்சு நடக்குது,”னு தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் சொல்லியிருக்காங்க. இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “எங்களுக்கு ரஷ்ய எண்ணெய் மலிவா கிடைக்குது, இது உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உதவுது,”னு வாதாடுறார்.
இந்த புது வரி விதிப்பு, இந்தியாவோட பொருளாதாரத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். 2024-ல் இந்திய-அமெரிக்க வர்த்தகம் 130 பில்லியன் டாலரை தொட்டிருக்கு, ஆனா 25% வரி வந்தா இந்திய ஏற்றுமதி சந்தைல பெரிய அடி விழலாம். இதோட, ட்ரம்போட 100% வரி மிரட்டல், ரஷ்யாவோட வர்த்தகத்தை நம்பியிருக்குற இந்தியா, சீனா, பிரேசில் மாதிரியான நாடுகளுக்கு பெரிய சவாலா இருக்கு.
ரஷ்யாவோட உறவு, இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் விநியோகத்துல முக்கியமானது, இதை திடீர்னு நிறுத்த முடியாது. ட்ரம்போட இந்த வரி மிரட்டல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புது தந்திரமா பார்க்கப்படுது. ஆனா, ரஷ்யாவோட கடுமையான பதிலடி, இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும்னு கேள்வி எழுப்புது.
இதையும் படிங்க: 600 ஆண்டுகளுக்குப் பிறகு.. ரஷ்யாவில் வெடித்த எரிமலை.. மக்களுக்கு பாதிப்பா..??