நிதீஷ் குமாரை மையப்படுத்தியே இந்த சட்டமன்ற தேர்தலை பாஜக சார்பில் சந்தித்திருக்கக்கூடிய சூழலில் தற்போது பீகாரின் முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு நிலையில் நிதீஷ் குமார், பாஜக கூட்டணி கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டு 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இதை மேலும் சுவாரசியமாக்கும் விதமாக நித்திஷ் குமாரின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்கும் அளவிற்கு பாஜக முன்னிலை வகித்துநிதீஷ் குமாரின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்கும் அளவிற்கு பாஜக முன்னிலை வகித்து வருகிறது . பாஜக 95 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நிதீஷ் குமார் கட்சி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பீகாரின் அடுத்த முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் அரியணை ஏறுவாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: வரலாற்று வெற்றி! பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையின் முத்திரை... ஜே. பி. நட்டா பெருமிதம்...!
பீகார் அரசியலில் இருபது ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து வரலாற்றுச் சாதனை படைத்தவராக இருந்தாலும், வயது காரணமாக நிதீஷ் குமாருக்கு பதிலாக இளமையான ஒரு நபரை முதலமைச்சராக அறிவிக்கலாம் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முந்தி அடித்துக்கொண்டு நிதீஷ் குமார் கட்சியினர் செய்த காரியம் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பியுள்ளது. "இன்று நேற்று நாளை எப்போதுமே நித்திஷ் குமார் தான் முதலமைச்சராக நீடிப்பார்" என அவரது கட்சி சார்பில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டது. அந்த பதிவாள் எந்தவிதமான சர்ச்சையும் வெடிக்கவில்லை,
ஆனால் சில இடங்களிலேயே அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. ட்விட்டை டெலிட் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிதீஷ் குமார் கட்சிக்கு எதனால் வந்தது, யார் சொல்லி ட்வீட் டெலிட் செய்யப்பட்டது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பியுள்ளது.
ஏனெனில் பீகார் சட்டமன்றத் தேர்தலை நிதீஷ் குமார் கட்சியுடன் இணைந்து எதிர்கொண்ட பாஜக, தேர்தல் பிரச்சாரங்களில் கூட முதலமைச்சர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை. பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் கூட தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வார்கள் என தெரிவித்திருந்தார்.
இத்தனைக்கும் 20 ஆண்டு காலமாக நிதீஷ் குமார் அங்கே ஆட்சி செய்து வருகிறார். நிதீஷ் குமாருடைய கோட்டையாக பீகார் இருக்கிறது. பாஜக தற்பொழுது நிதீஷ் குமாரோடு பல ஆண்டுகளாக இணைந்து பயணம் செய்தாலும், அவர் தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.
ஆனால் இப்பொழுது தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவைச் சேர்ந்த ஒரு தலைவர் நிதீஷ் குமாரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தோம் என சொல்லியிருக்கிறார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வந்து கொண்டிருப்பதால் அக்கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே பாஜக தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது கட்சியை சேர்ந்த இளம் வேட்பாளர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க கூடும் என்ற யூகங்கள் வெளியாகி வந்தன. ஆனால் சொந்த மாநிலத்தில் நிதீஷ் குமார் கட்சியை பெரும்பான்மை பெறக்கூடும் என்பதால் அக்கட்சியினர் அமைதி காத்து வந்தனர். பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பீகார் தேர்தலில் விஸ்வரூப வெற்றி வருவது நித்திஷ் குமார் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் நிதீஷ் குமாரை முன்னிலைப்படுத்தியே தேர்தலை சந்தித்து இருந்தாலும் முதலமைச்சர் யார் என்பதை நாங்கள் தான் தேர்வு செய்வோம் என பாஜக அறிவித்துள்ளதாக தற்போதைய தகவல்கள் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பீகார் தேர்தல் நிதீஷ் குமாருக்கு மாற்றமாக இருக்குமா? ஏமாற்றமாக அமையுமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாஜக 33 இடங்களில் வெற்றி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! மண்ணைக் கவ்வும் காங்கிரஸ்...!