உலகின் மிகப் பெரிய பில்லியனர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரிதாக பேசுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் இந்திய தொழில்முன்னோடி நிகில் கமத் உடனான போட்காஸ்ட் உரையாடலில், அவர் தனது மனைவி ஷிவோன் ஜிலிஸின் இந்திய வம்சாவளி மற்றும் அவர்களது மகனின் பெயர் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். "எனது பார்ட்னர் ஷிவோன் அரை இந்தியர் என்றும் அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். இது இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் சுப்ரமண்யன் சந்திரசேகரை கௌரவிக்கும் வகையில் வைக்கப்பட்டது," என்றும் மஸ்க் கூறினார்.

ஷிவோன் ஜிலிஸ், நியூராலிங்க் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு கனடிய-அமெரிக்க தொழிலதிபர். அவரது தாய் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதுவரை பொதுவில் அறியப்படாத தகவலாகும். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர். அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என்று நினைக்கிறேன். எனக்கு அதுபற்றி முழு விவரங்கள் தெரியாது. ஆனால் ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர். அவர் கனடாவில் வளர்ந்தார்” என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்-ஷிவான் சிலிஸ் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புகையிலை, பான் மசாலா மீது புதிய 'செஸ்' வரி.. புதிய மசோதா தாக்கல் செய்யும் நிதியமைச்சர்!
எலான் மஸ்க் மேலும் பேசுகையில், அமெரிக்கா திறமையான இந்தியர்களால், பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு குடியேறிய இந்தியர்களால் அமெரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருகிறது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதுபோன்ற கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்தது.
எச்1பி விசா திட்டத்தில் சில தவறான பயன்பாடுகள் இருந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் இந்த திட்டத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இல்லை. திறமையானவர்களுக்கு எப்போதும் பற்றாக்குறை இருக்கும். எனது பார்வையில், இந்த கடினமான பணிகளைச் செய்ய போதுமான திறமையானவர்களைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் இருப்பது எனக்குத் தெரியும், எனவே இன்னும் திறமையானவர்கள் இருந்தால் நல்லது என்று கூறினார்.
எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) போன்ற நிறுவனங்களின் தலைமை அதிகாரியாவார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புதிய வெளிப்பாடு, மஸ்கின் இந்திய இணைப்புகளை வலுப்படுத்துகிறது. அவர் ஏற்கனவே இந்தியாவின் சூரிய சக்தி திட்டங்களை பாராட்டியுள்ளார் மற்றும் டெஸ்லா தொழிற்சாலை இந்தியாவில் அமைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

இந்த வெளிப்பாடு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் சந்திரசேகரை கௌரவித்ததற்கு பாராட்டுகின்றனர். மஸ்க், "திருமணம் என்பது பழமையான கருத்து" என்று கூறி, நவீன உறவுகளை ஆதரித்தார். இது அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை திறக்கிறது, இந்தியாவுடனான அவரது தொடர்புகளை வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க: சென்னையை கவரும் Wonderla..!! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உலகத் தர பொழுதுபோக்கு பூங்கா!