தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டத்தில் பையாரம் மண்டலத்தில் உள்ள கொடிபுஞ்சுலதண்டாவைச் சேர்ந்த தாராவத் ராஜு மற்றும் கவிதா தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். வழக்கமாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கணவர் ராஜு தனது விவசாய வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சாப்பாடு பரிமாறச் சொன்னபோது ஏற்கனவே டி.வி. சீரியலில் மூழ்கியிருந்த கவிதா விளம்பரம் இடைவெளி வரும்போது பரிமாறுவேன் என்றார். இதனால் கோபமடைந்த ராஜு “என் பசியை விட சீரியல் முக்கியமா என்று கூறிவிட்டு கோபமாக வீட்டில் இருந்து வெளியேறினார்.
கணவரின் வார்த்தைகளால் மனமுடைந்த கவிதா தனது மகனுக்கு பூச்சிக்கொல்லி மருந்தைக் கொடுத்துவிட்டு, அதே மருந்தை தானும் குடித்தார். தனது மகளுக்குக் கொடுக்க முயன்றபோது, வீடு திரும்பிய ராஜு, அதைக் கவனித்து கவிதாவை தடுத்தார். தாயும் மகனையும் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: நள்ளிரவு முதல் தொடரும் கனமழை... கிடுகிடுவென உயரும் ஏரிகளின் நீர்மட்டம்!
மகனின் நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வாரங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை.. ஒரே போடாக போட்ட சரத்குமார்..!!