பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மிக வினோதமான மற்றும் அசாதாரண வெப்ப மாறுபாடுகள் காரணமாக, உலகையே அச்சுறுத்தும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் அசுர வேகத்தில் தீவிரமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு (WMO) தற்பொழுது அதிகாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு ரெட் அலர்ட் (Red Alert) விடுத்துள்ளது.
வானிலை ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நடப்பு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த எல் நினோ காலநிலை மாற்றம் முழுமையாக உருவாவதற்கு 80 விழுக்காடு வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆபத்தான தாக்கம் வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கு 90 விழுக்காட்டிற்கும் மேல் அதீத வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன. இந்த எல் நினோவின் நேரடித் தாக்கத்தின் காரணமாக, இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளிலும் இந்த ஆண்டு வழக்கமாகக் பொழியும் தென்மேற்குப் பருவமழை (South West Monsoon) அதன் இயல்பான அளவை விடப் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்தால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை மாதங்களில் உலகெங்கிலும் வரலாறு காணாத வகையில் உஷ்ணம் அசுர வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் தகிக்கும் கடுமையான வெப்ப அலைகள் (Heatwaves), தீவிர வறட்சி மற்றும் சில கடலோரப் பகுதிகளில் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அதீத வானிலை தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் விடுத்துள்ள அவசர அழைப்பில், "ஏற்கெனவே புவி வெப்பமயமாதலால் தவித்து வரும் உலகிற்கு, இந்த எல் நினோ தாக்கம் என்பது 'எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல' உலக வெப்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, அனைத்து நாடுகளும் இப்போதே தங்களது முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்க வேண்டும்" என மிகவும் உறைப்பாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசு அவசர எச்சரிக்கை! ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
இதையும் படிங்க: பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!