கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், அந்தப் பணத்தை ஒரு பெண் திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த அன்றைய இரவே, விஜய் அவசர அவசரமாக சென்னை திரும்பியது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களை 10 நாட்களுக்குப் பிறகு வீடியோ காலில் சந்தித்து பேசிய விஜய், நிச்சயமாக நானே நேரில் வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அப்போது விஜய் தனது கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், கடந்த 18ஆம் தேதி அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார் விஜய்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு... மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் விஜய் அரங்கேற்றிய அவலம்...!
சரி நிவாரண தொகையைத் தான் நேரில் வந்து கொடுக்கவில்லை. நிச்சயம் தங்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறுவார் என கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் காத்துக்கிடந்தனர். ஆனால் விஜய் பனையூரை விட்டு நகரவே மாட்டேன் என்பது போல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து ஆறுதல் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்தார்.
கரூரில் இருந்து 5 ஏசி பேருந்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அழைத்து வரப்பட்டு, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை அதே விடுதியில் புக் செய்யப்பட்டிருந்த தனது அறைக்கு ஒவ்வொரு குடும்பமாக அழைத்து ஆறுதல் கூறினார். இதில்கோடங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த ரமேஷ் (32) என்பவரது மனைவி சங்கவி மற்றும் சிலர் கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.
அதுவும் சங்கவி இறந்த தனது கணவருக்காக செய்த காரியம் சோசியல் மீடியாக்களில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது விஜய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்திய 20 லட்சம் ரூபாயை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கரூர் கூட்ட நெரிசலில் எனது கணவர் உயிரிழந்தார். இதற்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக வந்து ஆறுதல் தெரிவித்து, பணம் கொடுப்பதாக வீடியோ காலில் பேசும்போது தெரிவித்திருந்தார். இறந்துபோன எனது கணவர் திரும்ப வரப்போவதில்லை. கூட்டத்திற்கு சென்றுதான் எனது கணவர் இறந்தார். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. நாங்கள் ஆறுதலைதான் எதிர்பார்த்தோம்” எனக்கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “விஜய் அழைத்த கூட்டத்திற்கு நாங்கள் செல்லவில்லை. அங்கு செல்வதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், எங்கள் பெயரை தவறாக பயன்படுத்தி, எங்கள் உறவினர்கள் 3 பேர் கூட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனால், எனது விருப்பமில்லாமல் வங்கி கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அவர்கள் பணம் செலுத்தியது குறித்தும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை” எனக்கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் மனைவி வர விரும்பமில்லை எனக்கூறியதை தலைமைக்குத் தெரிவிக்காமல், இறந்து போன ரமேஷின் தங்கை உள்ளிட்டவர்களை அழைத்துப் போய் கணக்கு காட்டிய தவெகவினரை சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர்” - கரூர் சம்பவம் குறித்து காட்டமாக விமர்சித்த கருணாஸ்...!