சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் போது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன, மேலும் இவை வாக்காளர்களை பணம், பரிசுப் பொருட்கள் அல்லது பிற இலவசங்களால் பாதிக்காமல் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், பொதுமக்கள் ரொக்கமாக ரூ.50,000 வரை மட்டுமே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு மேல் பணம் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், அதன் மூலம், நோக்கம் மற்றும் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வங்கி பணம் எடுப்பு ரசீது, ஜிஎஸ்டி ரசீது, திருமண அழைப்பிதழ் (திருமண செலவுக்கு), சொத்து ஒப்பந்தப் பத்திரம் அல்லது வணிக பரிவர்த்தனை ஆதாரங்கள் போன்றவை இதில் அடங்கும்
இதையும் படிங்க: ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!
இந்த நிலையில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகனத் எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..! முதல்வர் ஸ்டாலின் 5ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!! முழு விவரம்..!