சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகார் ஒன்றில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணையின் போது போலீசார் அடித்து தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்த அஜித் குமாருக்கு நீதி வழங்க கோரியும், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் இன்று காலை சென்னையில் உள்ள சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இது வெறும் முதல்வர் மு.க ஸ்டாலினை கண்டித்து நடக்கக் கூடிய போராட்டம் கிடையாது. ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின்போது அன்றைய முதல்வர் சிபிஐக்கு வழக்கை மாற்றியபோது ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடியைப் பதவி விலகச் சொன்னார். இப்போது ஏன் நீங்கள் சிபிஐக்கு வழக்கை மாற்றினீர்கள். அஜித்குமாரின் அம்மாவிடன் Sorry எனச் சொன்னது தேர்தல் நேர நாடகம்.
இதையும் படிங்க: ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?
காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எங்களின் தலைவரைச் சந்தித்தபோது இரத்தக் கண்ணீர் வடித்தனர். ஜெய்பீம் படத்தை பார்த்து அழுத முதல்வர் ஸ்டாலின் எனக்கு 3 நாட்கள் தூக்கம் வரவில்லை என்று சொன்னார். உண்மைய பார்த்து உங்களுக்கு கண்ணீர் வராது. அஜித் குமார் போல் 31 அப்பாவிகளின் மரணங்களும் மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 31 நிரபராதிகளுக்கும் நீதி வேண்டும் என்றார்.

மேலும் 17 வயது சிறுவன் லாக்கப் டெத்தால் இறந்தபோது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தீர்கள். அதன் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, இந்த குடும்பங்களின் தாய்மார்கள் கண்ணீருக்கு விடை வேண்டும். இந்த 31 பேர் நிரபராதிகளுக்கும் நீதி வேண்டும். அரசியல், தேர்தல் எல்லாத்தையும் ஓரமாக வைச்சுடுவோம்.. உள்துறை அமைச்சராக இருக்க கூடிய ஸ்டாலின் 31 பேருக்கும் நீதியை சொல்ல வேண்டும். இதற்கு விடை கிடைக்காவிட்டால் எங்க தலைவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார் என்று கூறினார்.
மேலும் இது சாதாரண போராட்டம் என்று நினைத்துவிடாதீர்கள்.. 6 மணியோடு முடிந்துவிடும் என்று நினைக்காதீங்க.. நேற்று எல்லாருடைய கண்ணீரையும் பார்த்த பிறகு, அந்த தாயின் கண்ணீருக்கு கண்டிப்பாக நாம் நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று எங்க தலைவர் சொன்னார். நீதிபதி சந்த்ரு அவர்களே நீங்களாவது அந்த அறிக்கையை வெளியிடுங்கள்.. என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
இதையும் படிங்க: ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?