ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்றிரவு ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்பதற்கு மத்திய அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய முப்படை வீரர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் என்று கூறிய ரஜினிகாந்த் இந்த போரை வலிமையாகவும் திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்டு அழிக்கபப்ட்ட போதும் நடிகர் ரஜினிகாந்த் இந்திய வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். போராளியின் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பணி முடியும் வரை நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'டேக்' செய்து தனது ஆதரவைத் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?