முதல்வரின் டெல்லி பயணத்தை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிரபல நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனக்கு மாதம்தோறும் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் பயம் என்பது இரத்தத்திலேயே இல்லை என்று கூறும் சீமான் எதற்காக காவல்துறை விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மிஸ்டர் சீமான் சொல்றாரு ஒரு ED ரெய்டு ஆன உடனே திமுகக்காரங்க வந்து அப்படியே கதறிட்டு மோடி அவர்கள் கிட்ட போய்டுறாங்களாம்.

சீமானோட பரம்பரையோட இரத்தத்திலே பயம் என்பது கிடையாதாம். சீமான் அவர்களே உங்களுக்கு தான் பயம்ன்றது வந்து இரத்தத்திலே கிடையாதே. அப்போ தமிழ்நாடு காவல்துறை வந்து என்னோட கேஸ்ல வந்து உங்கள விசாரணை பண்ண அழைச்சப்போ, இதே மாதிரி ஆம்பளையா தைரியமா அதை பேஸ் பண்ணி இருக்க வேண்டியதுதானே. எதுக்கு ஓடுனீங்க. அப்படியே கதறிட்டு அப்படியே என்னை காப்பாத்துங்கன்னு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கிட்ட ஓடுனீங்களே?, எதுக்கு ஓடுனீங்க.

இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!
உனக்கெல்லாம் வந்து உன் பொண்டாட்டி கிட்ட உண்மை சொல்றதுக்கே துப்பு இல்லையாடா?. நான் இங்க ஒருத்தி ப்ரூப் வச்சு காமிச்சிட்டு உடாந்துட்டு இருக்கறேன். உன் பொண்டாட்டிகிட்ட ஆமா நான் மாசம், மாசம் காசு போட்டேன்னு சொல்ல யோக்கியதை இல்லை.

நீயெல்லாம் ஒரு வீரனா, விஜயலட்சுமி யாருன்னு கேட்டா ஆமாடா அவன் என் பொண்டாட்டிடா அப்படின்னு சொல்றதுக்கு உனக்குகெல்லாம் துப்பு இல்லையா?. உட்கார்ந்து சீன் போட்டுட்டு இருக்கறான். நீ உண்மையான வீரனா இருந்தால், விஜயலட்சுமி என் பொண்டாட்டி தான்டா அப்படின்னு தைரியமா சொல்லிட்டு என்னை வாழ வச்சிருந்துருந்துருப்ப அதை விட்டுட்டு அவங்க ஒரு பாலியல் தொழிலாளி அந்த பாலியல் தொழிலாளிக்கு எதுக்குடா 50,000 போட்ட அப்படின்னு சாமானிய மக்கள் கூட அவனை கேட்டு காரி துப்பிட்டு இருக்கறாங்க. அதை தொடைச்சு போட்டுகிட்டு உட்கார்ந்துக்கிட்டு, அவங்க இப்படி இவங்க இப்படின்னு சொல்லிக்கிட்டு திரியுற என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விஜயலட்சுமி சகட்டு மேனிக்கு ஒருமையில் சாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனிமவள கடத்தலை வேடிக்கை பார்ப்பதால் தான் இந்த நிலைமை.. கிரானைட் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்!