சென்னை வில்லிவாக்கம், டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஏற்கனவே கொளத்தூரில் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஒரு மணி நேரமே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததால் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது ஏன் என ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார். அப்போது சென்னை காவல் ஆணையர் அருண் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டால் தான் தேர்தல் ஜனநாயகமாக நடக்கும் என்று வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதன் பின்னால் சென்னை காவல் ஆணையர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே ஒரு மணி நேரம்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று போலீஸ் கூறியதாகவும், விஜய் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு காவல் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: முதல்வர் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கத்தில் TVK தான்... அடித்துக் கூறும் ஆதவ் அர்ஜுனா..!!
சென்னையில் விஜய் பிரச்சாரம் நேரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு காவல் ஆணையர் அருண் அழுத்தம் கொடுக்கிறார் என்றும் முதலில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதி அளித்திருந்தார் என்றும் கூறினார்.. காவல் ஆணையர் அருண் கொடுத்த அழுத்தம் காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 3 மணியாக மாற்றி அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரு கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் காவல் ஆணையருக்கு கிடையாது என்றும் விஜய் பிரச்சார அனுமதி கடிதம் ஒரு மணி நேரத்தில் மாறியது எப்படி என்றும் கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அனுதாப ஓட்டு வேணுமா? பழைய ஆர்எஸ்எஸ் டெக்னிக்..! ஆதவ் அர்ஜுனாவை வம்பு இழுத்த ஜூலி..!!