அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானும், பயங்கரவாதம் அழியவும், நமது நாட்டின் ராணுவம் வலிமை பெறவும், யுத்தத்தில் வெற்றி பெறவும் தெய்வ பலம் எப்போதும் அவசியம் தேவை. அதனால், சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளோம்.
தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களுக்கு நிதி இல்லை என்று மாநில அரசு கை விரிக்கிறது. ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், சிலை, மணிமண்டபம் என்றால் உடனே நிதி ஒதுக்கீடு செய்து விடுகிறார்கள்.

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு என்கிற பெயரில் கோவை,வ்மதுரையில் பொதுசொத்துகளைச் சேதப்படுத்தி, மக்களுக்குத் தொந்தரவு செய்துள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டணி 2026ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். இந்த வெற்றியைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய்க்கு நிதியுதவி, அனுமதி, ஆதரவுகளை அளித்து வருகின்றனர். அதிமுக - பாஜக வாக்குகளைப் பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்து வருகிறது. திமுகவின் ‘ஏ’ டீம்-ஆக விஜய் உள்ளார்" என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுக்கூட்டத்தில் ஏடாகூடமாக பேசிய நிர்வாகி... அதிரடியாக ஆக்ஷன் எடுத்த அதிமுக!!
இதையும் படிங்க: ஆபாச ஆக்ஷன்! பூச்சாண்டி காட்டிய போலீஸ். நொங்கெடுத்த ADMK நிர்வாகி...