தென்காசி வேன் ஸ்டேண்ட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவருக்கு கச்சேரி வகைகள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, குற்றாலத்தில் பஸ்சே ஆடுது. அந்த அளவிற்கு மகிழ்ச்சி.தென்காசி நகரமே குலுங்கும் அளவிற்கு மக்கள் கூட்டம்.இது வெற்றிக்கு அறிகுறி. இந்த பகுதி வேளாண்மைக்கு முக்கிய பகுதிஅதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொன்டு வந்தோம்.
அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கினோம்.கன மழையால் பயிர்கள் சேதமான போது பயிர் காப்பீடு கொன்டு வந்தோம்.விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்தோம்.இப்படி ஏதாவது ஒரு திட்டத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளதா?, இன்று திமுக ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.தமிழகம் தற்போது போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி, கல்வீச்சு.. நெல்லையில் பரபரப்பு...!
அதை நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்திநோம். ஆனால் அவர்கள் கன்டூகொள்ளவில்லை. மக்கள் செய்திகளை பார்த்து அதிருந்து போய் உள்ளார்கள்.இந்த மோசமான ஆட்சி தொடர வேண்டுமா.அதிமுக 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.67 கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தோம். இன்று இந்தியாவில் தமிழகம் தான் பட்ட படிப்பு படிப்பதில் முதல் மாநிலம்.மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்தோம். அதையும் நிறுத்தி விட்டார்கள்.
மீண்டும் எங்கள் ஆட்சி வந்ததும்மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். நிறுத்த பட்ட திட்டங்கள் தொடரும்.மக்களிடம் நல்ல மதிப்பை பெற்ற அரசு அதிமுக.முதல்வர் ஸ்டாலின் இப்போது தான் மக்களை நினைத்து பார்க்கிறார். முதல்வர் மக்களை குறித்து கவலைப்படவில்லை.விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றாதீர்கள்.
சொத்துவரி உயர்த்த மாட்டேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசு திமுக. கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றினோம்.கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றினோம்.
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டோம்.ஸ்டாலின் கூட்டணியை நம்பியிருக்கிறார். அதிமுக மக்களை நம்பியிருக்கிறோம். தென்காசியில் அரசு சட்ட கல்லூரி அமைப்போம் என்று கூறினார்கள். அமைத்தார்களா.தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டும் இன்னும் திறக்க படாமல் உள்ளது. ண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஜம்பு நதி திட்டம் தொடங்கப்படும்.குற்றாலம் வளர என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்வோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!