சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்றுப் பயணத்திற்கான பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜுலை 7 முதல் சுற்றுப்பயணம் மாற்றம் வரும் என்றார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்; 234 தொகுதிகளுக்கும் செல்கிறேன்.

எனது சுற்றுப்பயணம் தமிழக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்; நான் எப்போதும் மக்களுடனே பயணிக்கிறேன். மக்கள் ஆதரவுடன் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க., வரலாறு படைக்கும் என்றார். தேர்தலில் அதிமுக, வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தால் வரவேற்போம்.
இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கும் அளவுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். யாரெல்லாம் திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

திமுகவை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க என் அழைப்பை பதிவு செய்கிறேன். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
இதையும் படிங்க: நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!