சிவகாசியில் நடந்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க வைத்தது.
மோசடி வழக்கில் தன்னை கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு ஏதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
என்னை தனிமை சிறையில் அடைத்து என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன். சிறைக்குள் சிறை என தனிமைச் சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: சிறுத்தை எங்கயுமே சிறுத்தை தான்! பிரதமர் நிகழ்ச்சியில் திருமா.. வன்னியரசு விளக்கம்..!
சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை என கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கண்ணீர் மல்க பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியது அங்கிருந்த அதிமுகவினரை உணர்ச்சி பொங்க வைத்தது.
யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் போட்டியிடுவேன் எனக்கூறியவர், என்னை இரு முறை அமைச்சராகிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார்.
இதையும் படிங்க: 500 வண்டியில ஆளுங்க தயாரா இருக்காங்க... ஆட்சியரை எச்சரித்த ராஜேந்திர பாலாஜி...!