சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்காக, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில், 17 .10. 1972 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மக்கள் இயக்கத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்தார்.
தற்போது 53 ஆண்டை கடந்து 54 ஆண்டை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடி எடுத்து வைக்கிறது. இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி, உலகத் தலைவர்கள் உற்றுநோக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா வரலாறு படைத்தார் .இதனைத் தொடர்ந்து இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடியார் ஒரு தொண்டன் நாடாள முடியும் என்ற வரலாற்றை சாதித்து காட்டினார். குறிப்பாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டம் ,ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் என பல்வேறு சாதனை திட்டங்களை படைத்தார்.
தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். குறிப்பாக தூங்கும் போதும், நடமாடும்போதும், உணவு உண்ணும் போதும், சிந்திக்கும் போதும் அவருக்கு இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக தெரிகிறது.
இதையும் படிங்க: “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!
அங்கே நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை என்றும். பாஜக கூட்டணி இல்லை என்று முதலில் கூறியவர்கள் அமிர்ஷா முன்னிலையில் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள் என்றும். சென்னையில் ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் உள்ளது என்று கூறுகிறார்கள், ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா அலுவலம் தான் அதிமுக அலுவலகம், அந்த அளவில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர் என்று பேசியது மட்டுமல்ல, திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி என 27 அணிகள் உள்ளது. ஆனால் அதிமுகவில் இபிஎஸ் ,ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் என பல அணிகள் உள்ளது என்று எள்ளி நகையாடியுள்ளார். தனக்குத் தானே திருப்தி கொண்டு சொந்தக் கட்சிக்கார்களை நம்பிக்கையூட்ட அடுத்த கட்சியிடம் பஞ்சாயத்து பேசும் ஒரு இயக்கம் அதிமுக என்று வாய்க்கு வந்ததை உதயநிதி ஸ்டாலின் உளறிக்கொட்டி உள்ளார் .
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினே உங்கள் முகவரி என்ன? உங்கள் தாத்தா, உங்கள் தந்தை உழைப்பின் மூலம் உள்ள முகவரியை வைத்துக் கொண்டு இன்றைக்கு புகாரி ராகம் என்று ஒப்பாரி வைத்து வருவதை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யலாம் அதற்கு நாகரீகம் உள்ளது, அரசியல் மரபு உள்ளது, ஆனால் தனிநபர் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப, திரும்ப நீங்கள், எத்தனை முறை அடித்தாலும் கேட்டாலும் சொல்லாதே என்பது போல நீங்கள் இது போல கூறி உங்களையே நீங்கள் ஆத்ம திருப்தியை அடைந்து கொள்கிறீர்கள்?
அதிமுக மக்கள் இயக்கம் 54 ஆண்டுகளான இந்த இயக்கத்தின் வலிமையை நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள் ? இதே புரட்சித்தலைவரை, உங்கள் தாத்தா குறைத்து மதிப்பீடு செய்ததால் 11 ஆண்டுகள் வனவாசம் போனார். அதேபோல புரட்சித் தலைவி அம்மாவையும் உங்கள் தாத்தாவும், உங்கள் தந்தையும் குறைத்து மதிப்பீடு செய்தார்கள் ,ஆளுங்கட்சியை இழந்து, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட திமுகவிற்கு கிடைக்கவில்லை என்ற வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் .
இன்றைக்கு ஒரு தொண்டர் நாடாள முடியும் என்ற வரலாற்றை எடப்பாடியார் உருவாக்கி உள்ளார், அவரை குறைத்து மதிப்பீடு செய்து வாய்க்கு வந்ததை உளறி வருகிறீர்கள் என சகட்டுமேனிக்கு உதயநித் ஸ்டாலினை விமர்சித்தார்.
இதையும் படிங்க: அப்படி பேசியிருக்கக்கூடாது... மனம் வருந்தி பகிரங்க மன்னிப்பு கோரிய செங்கோட்டையன்...!