மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொடிக்குளம் புதூர் கிராமத்தில் 18 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு," கிராம பகுதிகளில் கூலித் தொழில் செய்து வருகிறார்கள். கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும்.மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும், மாற்றம் கொடுப்பீர்கள் அல்லவா? என கிராம மக்களிடம் கேட்டார்.
5000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை குறித்த கேள்விக்கு, திமுகவுக்கு தான் இன்ப அதிர்ச்சியே தவிர, மக்களுக்கு இல்லை.தமிழக மக்களுக்கு இது வழக்கமான ஒன்று.அரசு மற்றும் அரசு உதவி பணியாளர்கள் தான் வேதனையில் உள்ளார்கள்.தூய்மை பணி, பழைய ஓய்வூதியம், விவசாய கடன், கலவிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு காசு இல்லை என்றார்கள்.யார் கேட்டாலும் காசு இல்லை என்று சொல்லிவந்தார்கள். இபிஎஸ் 10 தேர்தல் வாக்குறுதி கொடுத்தவுடன் அவருக்கு மக்களின் ஆதரவை பெருகிவிட்டது. முதல்வர் இரவு முழுவதும் தூங்காமல் தேர்தல் பயத்தால் 5000 ரூபாய் கொடுத்துள்ளார்.திமுக ஆட்டம் கண்டு விட்டது. இந்த 5000 ரூபாய் பயன் அளிக்காது.
திமுக தங்கக்கட்டி கொடுத்தாலும் மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.
முதல்வருக்கு தவறான கான்செப்ட் கொடுத்து செய்ய சொல்லி உள்ளார்கள்.கடந்த 2013 ஆம் ஆண்டு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்ப அட்டைக்கு 7500 கொடுத்தார் ஆனால் தோற்று விட்டார். அதேபோல ஜெகன் மோகன் ரெட்டி 5000 ரூபாய் கொடுத்து எதிர்க்கட்சியாக வர முடியவில்லை. கோடை கால சிறப்பு நிதி என ஜோக் ஜோக் ஆக சொல்கிறார்.பள்ளி மாணவர்களுக்கு தானே கோடை கால பயிற்சி வகுப்பு வைப்பார்கள். யாரோ ஒருவர் கான்செப்ட் சொல்லி நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். தங்கத் தட்டு கொடுத்தாலும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மக்கள் அமர வைக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!
விஜயை பயந்து தான் 5000 அறிவித்துள்ளதாக விஜய் சொன்னது குறித்த கேள்விக்கு, எங்களுக்கு வேண்டியது Direct fight.உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் காலி செய்வது, இபிஎஸ் எல்லாரையும் காலி செய்து விடுவார்.அதுபோல் திமுக வை எடப்பாடி துவைத்து எடுக்கப்போகிறார்.தமிழக மக்கள் விவரமானவர்கள், வைத்து செய்வார்கள். அவர்கள் அடித்து வைத்துக் கொண்ட காசை கொடுத்திருந்தால் பரவாயில்லை, மக்கள் பணத்தை தானே கொடுத்துள்ளார்கள். கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் எங்களிடம் சொல்லாமல் முதல்வர் 5000 ரூபாய் கொடுத்துவிட்டார் என வருந்தமாட்டார்களா?
விஜய் குறித்த கேள்விக்கு, விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல அவசியமில்லை.போற வழியில் தட்டி விட்டு போய் விடுவோம்,கண்டவர்களுக்குக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. போற வழியில் தட்டி விட்டு போய் விடுவோம்.Climax வந்துவிட்டது, நம்பியாருக்கும் - எம்.ஜி. ஆருக்கு தான் Fight
இதையும் படிங்க: செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!