வரப்போற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்ப இருந்தே தயாராகிட்டு இருக்கு. ஒருபக்கம் அதிமுக பாஜகவுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடிச்சியிருந்தாலும் பாமக, தேமுதிக, தவெகவை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அதேமாதிரி திமுகவும் பாமக, தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி பண்ணிட்டு இருக்குறதா சொல்லப்படுது. இந்த மாதிரி சமயத்துல ஒரு கட்சியினுடைய கூட்டணி பேரத்தை பற்றி அறிந்து கொள்ள மற்றொரு கட்சிகள் முயற்சிப்பதும், யார் கூட எப்படி கூட்டணி அமைக்கப்போறாங்குற முக்கிய தகவல்களை எல்லாம் எப்படியாவது தெரிஞ்சிக்க பார்ப்பாங்க.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் திமுககிட்ட உதவி கேட்டுப்போன அதிமுக முக்கிய நிர்வாகி ஒருத்தர் தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கிட்டாராம். அதிமுகவோட ஒரு அமைப்பின் தலைமை பொறுப்புல இருக்கிற ஒருத்தரு கொஞ்சம் பணத்தேவை இருந்ததுனால அரசியல் கட்சி தலைவர் ஒருத்தர் கிட்ட சில கோடிகள் அளவுல கடன் வாங்கி இருக்காரு. அந்த அரசியல் கட்சி தலைவர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி முறைக்கேட்டு வழக்கில் சிறைக்கு போன நிலையில், கடனை திருப்பி கேட்டு அதிமுக நிர்வாகிக்கு அழுத்தம் தந்திருக்காங்க.

அதுக்காக திமுக பவர் சென்டருக்கு நெருக்கமான ஒருத்தர் கிட்ட இந்த அதிமுக நிர்வாகி உதவி கேட்டு போயிருக்காரு. அந்த நபரோ அதிமுக தலைமை ஆலோசிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு முடிவு தொடர்பான விஷயத்தை பெரிய டிமாண்டா அதிமுக நிர்வாகி கிட்ட வச்சிருக்காரு. இதுக்கு சம்மதமும் சொல்லாம மறுப்பும் சொல்லாம வந்திருக்காரு அந்த அதிமுக நிர்வாகி.
இதையும் படிங்க: அதெல்லாம் வாய்ப்பே இல்ல... ஓபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ் விசுவாசி...!
இது அதிமுக தலைமைக்கு தெரியவர அந்த அதிமுகவோட முக்கிய ஆணையின் தலைமை பொறுப்புல இருக்கற நிர்வாகி மேல கடும் கோபத்துல இருக்காங்களாம். இதனால அந்த அதிமுக நிர்வாகி ஒரே அடியா அறிவாலய கதவை தட்டுற எண்ணத்தில இருக்காராம்.
இதையும் படிங்க: மாமன்ற கூட்டமா? திமுக கூட்டமா? - கொதித்தெழுந்த அதிமுக கவுன்சிலர்...!