மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரிடம், அதிமுக முக்கிய நிர்வாகிகள் திமுகவிற்கு தாவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுக காணாத தோல்வியும் கிடையாது காணாத வெற்றியும் கிடையாது.அதிமுக சிதறு தேங்காய் போல சிதறிய காலமும் உண்டு என்றார். ஆர்.பி.உதயக்குமாரின் இந்த கருத்தால், நமது கட்சியைப் பற்றி இப்படி பொதுவெளியில் பேசலாம் என அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முதலிடத்தில் உள்ளது.சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளாகியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திமுக அரசு உருவாக்கவில்லை. திமுக அரசு கடந்த 4.5 ஆண்டுகளில் இளைஞர்கள்களுக்கு கொடுத்துள்ள வேலைவாய்ப்பை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
சுதந்திர தின விழா முதலமைச்சர் உரை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லாமல் வெறும் " உப்புக்கு சப்பாக" இருந்தது."FAILURE மாடல்" ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: “எலி ஓடுறதை எல்லாம் சட்டை பண்ண முடியாது”... திமுகவில் ஐக்கியமான அன்வர் ராஜா குறித்து ஆர்.பி.உதயகுமார் கருத்து...!
முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக இங்குள்ள நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யலாம். தொழில்துறையில் கள நிலவரம் முதலமைச்சருக்கு தெரிகிறதா? இல்லையா?
இதையும் படிங்க: சி.எம். பதவி என்ன கருணாநிதி குடும்ப சொத்தா?.. திமுகவை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்..!