திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அதிமுக கொங்கு மண்டல பொறுப்பாளருமான எஸ். பி வேலுமணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் எஸ். பி வேலுமணி பேசுகையில், 2021ல் 21 தொகுதிக்கு 16 ல் அதிமுக வெற்றி பெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம், திருப்பூர், அதே போல் ஊட்டி போன்ற இடங்களில் தோல்வி அடைந்தோம். இதே போல் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால் எடப்பாடி ஆட்சி அமைந்திருக்கும், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
நடிகர் ஆரம்பித்த புதிய கட்சிக்கு போடும் ஓட்டு செல்லா ஓட்டாகும், 10 நாளா என்ன ஆனார் என்று தெரியவில்லை, திடிரென வேட்பாளரை அறிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சொந்த கட்சி காரர்களையே விஜயால் காப்பாற்ற முடியவில்லை, அவர் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார். நீங்கள் அதை பற்றி கவலை பட தேவையில்லை.
இதையும் படிங்க: ஒரே BALL-ல் 2 விக்கெட் காலி... கோவை தெற்கில் திமுக, தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி வைத்த செக்...!
அவர்களுக்கு கொள்கை உள்ளதா, வந்தால் திமுகவை கடுமையாக விமர்சிப்பார். திமுகவிற்கு எதிரான வாக்குகளை அதிமுக விடம் இருந்து பிரிப்பது தான் அவரின் நோக்கம். காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி கடுமையாக விமர்சித்தார்.
கலைந்து சென்ற கூட்டம்:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைத் தொடர்ந்து, காங்கேயம் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் பேச ஆரம்பித்த போது, மண்டபத்தில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் சாரை சாரையாக வெளியே செல்ல துவங்கினர். இருந்த போதும் விடாபிடியாக அதிமுக வேட்பாளர் நடராஜ், காலி சேர்கள் மற்றும் கலைந்து செல்லும் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராதாகிருஷ்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஆகியோர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் பேசும் போது நிர்வாகிகள் சாரை சாரையாக வெளியேறியதால் மேடையில் இருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: “மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!