தவெக முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிமுக நிரந்தர பொது செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரை வணங்கி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இருபெரும் தெய்வங்களின் ஆசியோடு தாய் தமிழ்நாட்டு மக்களை தலைவணங்கி சமர்ப்பிக்கின்றேன்.
வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கி 35 சதவீத வாக்குகளை பெற்ற த.வெ.க அரசு இப்போது வழி தெரியாமல் தட்டு தடுமாறி கரையில் இருக்கிறதா? அரசின் கப்பல் என்ற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!
நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபை இன்றைக்கு கூடுகிறது நமது முதல்வர் விஜய் தம்பி தலைமையேற்கும் முதல் சட்ட சபை கூட்டம். இதில் மேதகு ஆளுநர் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை த.வெ.க அரசு எப்படி கையாள போகிறது தெரியவில்லை.

அதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, நிதிநிலை அறிக்கை மீது விவாதம். அதை தொடர்ந்து துறைவாரியாக 33 அமைச்சர்களும் மானிய கோரிக்கைகளிலே தங்கள் துறைக்கான கோரிக்கைகளை முன் வைப்பார்கள். இவையெல்லாம் தெரிந்த ஒன்றுதான்.
மொத்தத்திலே த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏற்றம் தருமா? அல்லது ஏமாற்றும் தருமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கடன் அளவை வைத்து பேசி அரசை குற்றம் சொல்லியவர். இப்போது அதே கடன் அளவை சொல்லி அவருடைய வாக்குறுதிகளையும் தள்ளுபடி செய்து விடுவாரோ?என்று தற்போது நமக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.
அதற்கு ஆதாரம் இல்லாமல் நான் சொல்லவில்லை. இப்போது பயிர் கடனிலே அவர் தடுமாறுகிற தடுமாற்றம் எல்லோருக்கும் தெரியும். கடன் அளவை சுட்டிக்காட்டி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பை வரும்’என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டின் கடன் அளவை காட்டி வாக்குகளை பெற்ற நம்ம முதல்வர் விஜய் தம்பி அவர்கள், இப்போது கடன் அளவில் காட்டி தன் வாக்குறுதிகளை தள்ளுபடி செய்து விடுவாரோ என்கிற கவலையும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே தான் பெருத்த எதிர்பார்ப்போடு கூடுகின்ற இந்த கூட்டத்தொடரிலே நம்ம முதல்வர் விஜய் தம்பி அதிரடி அறிவிப்புகளை அள்ளித் தெளித்து அரங்கம் அதிர வைத்து நமக்கெல்லாம் அதிர்ச்சியை தருவாரா?
பஞ்சு டயலாக் பேசி மக்களின் மனதை பஞ்சர் ஆக்கிய நம்ம முதல்வர் விஜய் தம்பி பக்கம் பக்கமாக அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதை குளிர செய்வாரா அல்லது எப்போதும் போல இது சினிமா வசனம் தான் இது நிழல் தான் இது நிஜம் என்று நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல என்று கைவிரித்து விடுவாரா பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்
இதையும் படிங்க: ஆஹா ஓஹோ...!! பேஷ் பேஷ்...!! விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன சனிக்கிழமை ஸ்டோரி...!