2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் வேகமெடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் தனது அதிரடியான தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் மீண்டும் தொடங்குகிறார். ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பரப்புரைப் பயணம் டிசம்பர் 28-ஆம் தேதி திருத்தணி மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் தொடங்குகிறது. அன்றைய தினம் பொதுமக்களிடையே உரையாற்றும் அவர், திமுக அரசின் தோல்விகள் மற்றும் அதிமுக-வின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கங்களை அளிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 29-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட திருப்போரூர் மற்றும் சென்னையின் முக்கியத் தொகுதியான சோழிங்கநல்லூரில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இறுதியாக, டிசம்பர் 30-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துடன் இந்தப் பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.
தமிழகத்தில் ஆங்காங்கே உட்கட்சிப் பூசல்களும், கூட்டணிக் குழப்பங்களும் நிலவி வரும் சூழலில், இபிஎஸ்-ஸின் இந்தப் பரப்புரைப் பயணம் அதிமுக தொண்டர்களுக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது. “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற இந்த முழக்கம் கிராமப்புறங்கள் வரை சென்றடைய வேண்டும் என அதிமுக தலைமை ஸ்கெட்ச் போட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது வழிநெடுகிலும் எடப்பாடி பழனிசாமிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருவதால், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இப்போதே அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இதையும் படிங்க: லேப்டாப் திட்டத்தை சீர்குலைக்க EPS முயற்சி... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...!