‘‘அதிமுக கூட்டணியில் பாமக ரொம்பவே கணக்கு வழக்கு பார்த்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வது உறுதியான நிலையில், திடீரென பாஜகவுடன் கூட்டணியில் ஒட்டிக் கொண்டது. இதனால் ரொம்பவே அதிர்ச்சியானார் எடப்பாடி பழனிசாமி.
கேட்டதை எல்லாம் கொடுப்பேன் என்றேனே எனச் சொல்லி வேதனைப்பட்டார் இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு, கூட்டணி ஒப்பந்தத்தை ஏற்படுத்த கடந்த மாதம் சென்னை வந்தார். அவருடன் கைகோர்ப்பதாக அன்புமணி ராமதாஸ் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எந்த கூட்டணியாக இருந்தாலும் தைலாபுரத்துக்கு வந்து போவதுதானே உலக வழக்கம்? நாம் ஏன் அங்கே போக வேண்டும் என்று கேள்வி கேட்டதோடு, அன்புமணியின் கட்சி தலைவர் பதவியை நிறுவனர் ராமதாஸ் பறித்து விட்டார்.

தந்தை, மகனுக்கு இடையே முற்றிய மோதல் அப்படியேதான் இருக்கிறது. பாஜக தலைமையை ஏற்பதை விட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றால் கேட்கும் தொகுதி கிடைப்பதுடன், செலவுக்கு கைநிறைய பணமும் கிடைக்கும் என்பதுதான் பாமகவில் உள்ள அனைவரது விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: பாமகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் ரெண்டு மணிகள்... சோசியல் மீடியாவில் வெடித்தது உரிமைப்போர்!
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்ல போயுள்ளார் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள். அவர் வீட்டுக்குள் போனதும் எடப்பாடி பழனிசாமியின் பாதம் தொட்டு வணங்கியதுடன், ''உங்களால்தான் இந்நிலைக்கு உயர்ந்தேன், அதை எப்போதும் மறக்க மாட்டேன்'' என கூறியதை கேட்ட எடப்பாடி பழனிசாமி ''இந்த காலத்தில் இப்படியும் ஒரு விசுவாசமா?'' என நெகிழ்ந்து போயுள்ளார்.

எதிர்கால கூட்டணி குறித்து சில ரகசிய தகவலை பாமக மேலிடம் சொன்னதாக கூறியுள்ளார். சித்திரை நிலவு மாநாடு முடிந்ததும் அன்புமணி, ராமதாஸ் இருவரும் தன்னை சந்திக்க வருவதாக எடப்பாடி பழனிசாமி தகவல் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: பாமக சித்திரை முழு நிலவு மாநாடு..! திருமாவளவனுக்கு அழைப்பு..!