தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளை நெருங்கும் திமுக அரசு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற விமர்சனம் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிமுக, பாஜக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து எழுந்துள்ளன.
குறிப்பாக, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ஆறுகளை இணைத்தல் மற்றும் சுத்தப்படுத்துதல், அரசுப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேறவில்லை என்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாக்குறுதி மீறல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை., இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!
இதுவரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனடியாக, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுக அரசையும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வாக்குறுதி எண் 356! நியாபகம் இருக்கா? செவிலியர் போராட்டம்! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?!