சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ஒண்டிவீரனின் வீரத்தையும் தியாகத்தையும் நாம் நினைவு கூறாமல் இருக்க முடியாது. தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அவர்களுக்கு வேண்டுமென்றால் திருப்புமுனையை ஏற்படுத்தும் தமிழ்நாட்டிற்கு எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸை அனுப்பி பிரச்சனை செய்யும் அளவிலான நிலை தமிழகத்தில் இல்லை. அதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ஒருபோதும் எடுக்காது. நோயாளிகளை அழைப்பதற்காகவும் ஆம்புலன்ஸ் செல்லும் எப்பொழுதும் நோயாளிகளுடன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க: தவெக மதுரை மாநாட்டிற்கு புது சிக்கல்... விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த திமுக, அதிமுக...!
30 நாட்கள் சிறையில் இருந்தால் முதல்வர், அமைச்சர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களின் பதவியை பறிக்கும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இது தங்களுக்கு எதிரியாக நினைக்கக் கூடியவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்திய அரசு சட்டத்தை கொண்டு வரலாம் சட்டம் வரட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.
இதையும் படிங்க: அரசியல் களத்தையே அதிரவிட்ட தவெக... விஜய் மாஸ்டர் பிளான்... வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஏற்பாடு...!