நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.
மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு, மகளிர் பாதுகாப்பு குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு குழுகள் அமைக்கப்பட்டு அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறனர். விஜய் வருகை மற்றும் மாநாடு காரணமாக மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாநாட்டைப் போலவே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராம் வாக் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் நடந்து வந்து இருபுறம் இருக்கும் தன் கட்சி தொண்டர்களை பார்த்து கையசைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக கிட்டத்தட்ட கடந்த மாநாட்டை போல இந்த மாநாடும் சிறப்பாக செய்ய பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறலாம்.
இந்த மாநாட்டில் எந்த சிக்கல்களும் வரக்கூடாது எதற்காக தண்ணீர், உணவு, பார்க்கிங், போக்குவரத்து என ஒவ்வொன்றையும் தவெக பார்த்து பார்த்து செய்து வருகிறது. இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடல் பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு பேனரால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு ஒத்து ஊதி மடிப்பிச்சை எடுங்க… இந்த வேலையெல்லாம் எங்க கிட்ட வேணாம் - ஜெயக்குமார்
அதாவது வரலாறு திரும்புகிறது என்ற அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம்பெற்றதற்கு தற்போது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுவரை இல்லாத வகையில் தமிழக வெற்றிக்கழத்தின் மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களாக தந்தை,பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி வந்த விஜய், தற்போது திமுக, அதிமுகவின் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்.
விஜய் முதன் முறையாக கட்சி ஆரம்பித்தபோது கொள்கை பாடல் மற்றும் கொள்கை தலைவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. அப்போது தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியன் கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு பிறகு கொள்கை பாடல்கள் வெளியிட்டபோது ஆரம்பத்தில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் நிழல் படங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதாவது நேரடியாக அவர்களது உருவங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக நிழல் போல கருப்பு வண்ணத்தில் யன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாநாட்டில் முகப்பில் விஜய்க்கு இருபுறமும் அண்ணாவும் எம்ஜிஆரும் இருப்பது போன்ற புகைப்படம் மேடையில்
அதேபோல் தவெக கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் மேடையில் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளது. அதாவது இதுவரை வானுயர்ந்த கட் அவுட்களாக வைக்கப்பட்ட கொள்கை தலைவர்களின் படங்கள் சிறிய அளவில் இடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த விஜய், தற்போது திமுகவின் நிறுவனரான அண்ணா மற்றும் அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் புகைப்படங்களை பயன்படுத்தியிருப்பதை இரண்டு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: அரசியல் களத்தையே அதிரவிட்ட தவெக... விஜய் மாஸ்டர் பிளான்... வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஏற்பாடு...!