வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை செப்டம்பர் 15ல் அமல்படுத்துவதாக சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது.
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் 2007 முதல் 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடிய 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. பின்னர் இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாகவும் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ.. ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு..!!
இந்த வழக்கை விசாரித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு எதிராக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இருவரும் நேரில் ஆஜராகதால் இருவருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை. அவரது மனைவி சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி இருந்தார்.
அவர் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை நீக்க வேண்டும் எனக் கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சாந்தகுமாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை மட்டும் திரும்ப பெற்று உத்தரவிட்டார். பின்னர் வழக்கினுடைய விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிடிவாரண்டை அமல்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் விசாரணையும் தள்ளி வைத்து உத்தரவிட்டுருக்கின்றார்.
இதையும் படிங்க: அண்ணன் வராரு... வெலகு! செப். 13ல் விஜய் சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாக தகவல்