தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காகத் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "சென்னையில் தேர்தல் தொடர்பான களப்பணியில் ஈடுபட்டிருந்த எமது கழக நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியினர் நடத்தியத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் கருத்துச் சொல்லவும், களப்பணி ஆற்றவும் எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவது அவர்களின் தோல்விப் பயத்தைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

இன்று மதியம் சேலம் வந்த விமானத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரே விமானத்தில் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. விமான நிலையத்திலிருந்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் வெளியே வந்தபோது, ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். தவெக நிர்வாகிகள் புறப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி காரில் ஏறித் தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்குப் புறப்பட்டுச் சென்றார். தவெகவினரின் பிரம்மாண்டக் கூட்டத்தால் சேலம் விமான நிலையமே சிறிது நேரம் ஸ்தம்பித்தது
இதையும் படிங்க: விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!
இதையும் படிங்க: விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்? தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!