அட்டாரி வாகா எல்லையில் தினந்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்வான பீட்டிங் ரீபில் என்று சொல்லப்படுகின்ற கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை எடுத்திருப்பதால் இரு நாடுகளிடையே ஒரு பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்நிலையில் தான் இந்த பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கொடியிறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும்வரை இந்த ரத்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிதான் அட்டாரி வாகா என்று அழைக்கப்படுகின்றது. அட்டாரி என்பது இந்தியாவினுடைய எல்லை, வாகா என்பது பாகிஸ்தானுடைய எல்லை. இங்கு நாள்தோறும் நடைபெறக்கூடிய கொடியிறக்கும் நிகழ்வை நாள்தோறும் இரு பக்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் கண்டு கழிப்பது வழக்கம்.

அத்தகைய புகழ்பெற்ற நிகழ்வுதான் தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையிலான அந்த பதற்றம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அங்கு சூழல் மோசம் அடைந்தது. அதன் பின்னர் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றாலும் அந்த அளவுக்கு உற்சாகமாக நடைபெறவில்லை. குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கை குழுக்கிக் கொள்வது, கொடிகளை அசைப்பது, இனிப்புகளை பரிமாறுவது போன்ற சம்பிரதாய நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு மற்றொரு மரண அடி..! சத்தமில்லாமல் சரித்த இந்திய ராணுவம்..!
வெறும் சம்பிரதாயமாக கொடியும் நிகழ்வு மட்டுமே நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது இந்த ஆபரேஷன் சென்று நடவடிக்கையை தொடர்ந்து ஒட்டுமொத்தமாகவே இந்த பீட்டிங் ரீபிங் என்று சொல்லப்படுகின்ற கொடியற்கும் நிகழ்வு அடுத்த உத்தரவு ஒரு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கி ஏந்தி யுத்த களத்தில் சண்டையிட தயார்.. பரபரப்பை கிளப்பிய ராஜேந்திர பாலாஜி!!