திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட பாணியில், வடமாநில கொள்ளைக் கும்பலின் வெறிச்செயல் அரங்கேறியுள்ளது. வாடகை பணம் கேட்ட தமிழ் ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தை வடமாநில தொழிலாளர்கள் கத்தியால் கொடூரமாக அறுத்துவிட்டு தப்பியோடிய சம்பவம், ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையும் அதிரவைத்துள்ளதுடன் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் ஏறிய எமன்கள்:
தாராபுரம் தேவேந்திர தெருவைச் சேர்ந்த ஜெபராஜ் (48) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வேலை கிடைக்காத நிலையில் கஞ்சா வாங்கு போன்ற போதைப் பொருள்களுடன் இரயில் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வந்து தஞ்சம் அடைகின்றனர் பிறகு அங்கிருந்து எங்கு வேலை இருக்கிறதோ அங்கு செல்வதற்கு திட்டமிடுகின்றனர்.
இதையும் படிங்க: 50% முதல் 90% வரை தள்ளுபடி! ஏழை எளிய மக்களுக்காக மலிவு விலை மருந்தகங்களை அதிகரிக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
அப்படி தாராபுரம் பல்லடம் பூளவாடி ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணைகள் மற்றும் காற்றாலைகளில் வேலை செய்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் தாராபுரம் பகுதி புறநகர் கிராமப் பகுதிகளுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு தாராபுரம்ஸபேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஜெபராஜ் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4-பேர் கொண்ட ஹிந்தி மொழி பேசும் வடமாநில வாலிபர்கள், குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணை பகுதிக்குச் செல்ல வேண்டும் என ஜெபராஜ் இடம் கேட்டுள்ளனர். 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் 300 -ரூபாய் வாடகை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு சம்மதித்த வட மாநில தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர் ஜெபராஜ் இடம் செல்லும் வழியில் பல இடங்களில் நிறுத்தச் சொல்லியும் காத்திருக்க வைத்தும் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு ஆட்டோவில் ஏறிய வடமாநில கும்பல், ஜெபராஜுக்கு எமனாக மாறும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஓட ஓட துரத்தியும் தப்பிய கும்பல்:
ஆட்டோ குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், ஜெபராஜ் அதற்கான வாடகைத் தொகையைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வடமாநில வெறிக்கும்பல், ஜெபராஜுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்த வடமாநில வாலிபர்கள், ஜெபராஜின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர்.
கழுத்து துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்ற ஜெபராஜ், அலறியடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோடிய வடமாநிலக் கும்பலை ஓட ஓட விரட்டினர். ஆனால், அந்த மர்ம கும்பல் இருள் சூழ்ந்த பகுதிக்குள் புகுந்து தப்பியோடிவிட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை ஜெபராஜ் உள்ளார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த ஜெபராஜை மீட்ட பொதுமக்கள், உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், நிலைமை மிகவும் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மரணப் போராட்டத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் கொந்தளிப்பு: ஸ்தம்பிக்கிறது தாராபுரம்!
இந்த கோரச் சம்பவத்தால் தாராபுரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் கொந்தளிப்பிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
"உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழலில் நாங்கள் எப்படி இரவு நேரங்களில் தொழில் செய்வது?" என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளனர்.
குற்றவாளிகளை அடுத்த சில மணி நேரத்திற்குள் கைது செய்யாவிட்டால், நாளை காலை முதல் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதிலும் ஆட்டோக்கள் ஓடாது என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் வலைவீச்சு: பதற்றத்தில் தாராபுரம்!
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய வடமாநிலக் கும்பலைத் தேடி தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறல்களும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் கழுத்து அறுக்கப்பட்ட இந்த பயங்கர சம்பவம் தாராபுரம் பகுதி மக்களை நடுக்கத்திலும், கடும் பதற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. எந்த நேரத்திலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வெடிக்கலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாம் உலக போரை விட நீண்ட காலம் நீடிக்கிறது! ரஷ்யா-உக்ரைன் போரை முடிக்க அமெரிக்கா தயார்!