தமிழகத்தில் ஆளுநர், முதல்வர் இடையேயான பிரச்சனைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கான தீர்வை பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசோடு ஆரம்பித்திருக்க வேண்டிய இத்திருநாள் ஏமாற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். கடந்த ஆட்சியின் போது பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய தற்போதைய முதலமைச்சர், இப்போது ஒரு ரூபாய் கூட கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஈரோடு இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்திருப்பது திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கிறது என்பதையே காட்டுகிறது என்றார்.

தமிழ்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையில் ஆளுநரின் செயலை சிறுபிள்ளைத் தனமானது என முதலமைச்சர் விமர்சித்திருந்தார், அதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இரண்டு மாநிலங்களின் நிர்வாகத்தை நான் கவனித்துள்ளேன். அந்த அடிப்படையில் தமிழக முதல்வரும், ஆளுநரும் உட்கார்ந்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை பொங்கலில் வைக்கிறேன். இந்த மாதிரி கருத்து மோதல்களில் ஈடுபடுவது மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது. மாநில பிரச்சனைகள் பற்றி இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், ஆளுநரும் கருத்து வேறுபாட்டை விட்டு, தோழமையுடன் அமர்ந்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கமா இல்லையா? - அரசு மருத்துவமனைக்கு நடந்த அவலத்தால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியதை “சிறுபிள்ளைத் தனமானது” என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், முதல்வரின் விமர்சனத்திற்கு இன்று ஆளுநர் மாளிகை பதிலளித்திருந்தது. ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியதை சிறுபிள்ளைத் தனமானது என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். முதல்வரின் விமர்சனத்திற்கு இந்த ஆளுநர் மாளிகை பதிலளித்திருந்தது.

முக ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் அபத்தமானது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது. பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி எனக்கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...