நெல்லையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அவர்கள் வீடு தேடி வரும் அரசு சொல்லி உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டம் அரசாங்கத்திற்கு உடையது. அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அரசு பணத்தை சுரண்டுவது நியாயமானதல்ல.முதலமைச்சர் கட்சி பணிக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கது.
திமுக அணி தற்போது கலகலத்து போயிருக்கிறது. திமுக எங்களிடம் கூட்டணியில் இருந்த போது நாங்கள் அவர்களை கபளிகரம் செய்தோமா. அதிமுகவை பாஜக கபளிகரம் செய்வதாக பேசுகிறார்கள். அமித்ஷா சென்னைக்கு வந்ததுக்கு முன் வந்ததற்குப் பின் என தமிழகம் மாறி உள்ளது. கனிமொழி அலறுகிறார். பிஜேபி அதிமுக என. கூடா நட்பு கேடில் முடியும் அந்த காங்கிரஸ் உடன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். திமுக பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறது.
லாக்கப் டெத் தொடர்வதற்கு என்ன காரணம்.தான்தோன்றித்தனமாக நிர்வாகம் நடைபெற்று வருகிறது. ஊழலுக்கு உதாரணமே லாலு பிரசாத் தானே.தேஜஸ்வினி யாதவ் இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததற்கு வருத்தப்பட வேண்டும். வைகோ மீண்டும் இணக்கமாக வரலாமா என்ற கேள்விக்கு, மனமாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
இதையும் படிங்க: “இந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே பணி” - கொளுத்திப்போட்ட போட்ட எச்.ராஜா...!
வாக்காளர் பட்டியலில் குழப்பம் ஏற்படுத்தி பாஜக பல மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்களே என அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, இது அச்சத்தில் பேசுகிறார்கள். மோசடி பேச்சு. காவிக்கு பின்னால் திமுக மறைந்திருக்கிறது என நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு, கட்சியின் பெயரில் மட்டும்தான் வெற்றி இருக்க முடியும். விஜய்யிடம் பெரிய குழப்பம் இருக்கிறது. திமுகவின் பேச்சு முகமாகத்தான் நடிகர் விஜய் செயல்படுகிறார். நடிகர் விஜய்க்கு கிறிஸ்தவ ஓட்டுக்கள் பிரியக்கூடாது என்பதற்காக உதயநிதி கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.ராகுல் காந்தி என்னும் தேசத் துரோகிய தலைவராக வைத்திருக்கிறார்கள். மக்கள் புரிந்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்... வீரியமெடுக்கும் பிரச்சனை... அதிமுக - பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!