கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கரூர் விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் மீது வழக்கு போட்டு, குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் என்றால் அந்த வழக்கே நிற்காது. கொஞ்சமாவது சட்டம் தெரிந்த யார் வேண்டுமானாலும் சொல்வார்கள். அல்லு அர்ஜூன் வழக்கு அப்படித்தான் ஆனது. அவர்கள் மீது வழக்கே பதிவு செய்ய முடியாது.
சும்மா இவர்களின் அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம்,ஒரு இரவு சிறையில் அடைக்கலாம், அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஜாமின் கிடைத்து வெளியில் வந்துவிடுவார்கள். இதுஎல்லாம் சின்ன பிள்ளைகள் விளையாடும் ஆட்டத்துக்கு சமம். யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உள்பட தவெக நிர்வாகிகள் யாராவது இருக்கிறார்களா? அனுமதி வாங்கியவர்கள், அனுமதி அளித்த அதிகாரிகள், அவர்களின் பக்கம் தவறு உள்ளதா? அதே போல அனுமதி அளித்த அதிகாரிகள் தப்பு செய்துள்ளனரா? இவர்கள் தான் சம்பந்தப்பட்டவர்கள்.
நிகழ்ச்சி அனுமதி கிடைத்த பிறகு நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம், ஏன் முதல்வர் போகக்கூடிய நிகழ்ச்சி எத்தனையோ இந்தியாவில் நடக்கிறது. அப்படி ஒவ்வொரு அனுமதியும் முதல்வருக்கு தெரிந்து இருக்குமா என்றால் தெரிந்து இருக்காது. தவெக மீது தவறுகள் இருக்கிறதா என்றால் தவறுகள் இருக்கிறது. சில விஷயங்களை அவர்கள் சரியாக செய்திருக்க வேண்டும் என்று சொல்வேன். ஆனால் விஜய்யை குற்றவாளியாக மாற்ற வேண்டும் என்றால் அது முடியவே முடியாது. அது வாய்ப்பே இல்லை.
இதையும் படிங்க: ஊடகங்களை முடக்கும் திமுக அரசு… சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்குது! விளாசிய அண்ணாமலை…!
அரசியலுக்காக சிலபேர் பேசுகின்றனர். திருமாவளவன் எம்பியாக உள்ளவர். அவரின் கட்சியிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்தாலும்… அப்படி நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் திருமாவளவனுக்கும் நான் ஆதரவாக நிற்பேன். அவரது கட்சியில் இருந்து பெருமளவில் கட்சியினர் வெளியேறுவதை பார்க்கிறார். வேறு, வேறு கட்சிக்கு போகின்றனர். அந்த வயிற்றெரிச்சலில் தான் திடீரென்று திருமாவளவன், விஜய்யை பற்றி தாக்குவதோ, மத்திய அரசின் மீது தமது விமர்சனத்தையோ கடுமைப்படுத்தி இருப்பதாக நான் பார்க்கிறேன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் வருது… ரூ.10 லட்சம் கொடு! அண்ணாமலையின் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்… பகீர் கிளப்பும் வீடியோ…!