பாஜகவின் மூத்த தலைவரான ஹெச். ராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது நிலவி வரக்கூடிய வைரஸ் காய்ச்சல் தொடர்பான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஹெச்.ராஜா தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடியோ திரும்பினார்.
அவரது உடல் நலம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோடு, சோசியல் மீடியாக்களிலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்திருந்தன.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் கடந்த ஜனவரி 30ம் தேதி ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது, திடீரென அங்கு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன நிலையில் மேடையில் இருந்தவர்கள் அவரை சுதாரித்துப் பிடித்தனர். உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பக்கவாத பாதிப்பை கண்டறிந்த மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!
இதையும் படிங்க: மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!