நேற்று பல்வேறு இடங்களில் கிறிஸ்மஸ் விழாக்கள் கொண்டாடியவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனரே என கேட்டதற்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் கூற மாட்டேன் என பா.ஜ.க மூத்த தலைவர் எச் ராஜா. ஆவேசம்
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான எச்.ராஜா இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் . அப்போது செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது 4 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது ஒன்பது லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது அடுத்து வரக்கூடிய ஆட்சியாளர்கள் இதனை எவ்வாறு அடைப்பார்கள் என செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு கூட்டணி பற்றியோ, கூட்டணி மந்திரி சபை பற்றியோ நான் கருத்து கூற மாட்டேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட்டு ஆன்றோர் - சான்றோர்களிடம் இந்த துறை கொடுக்கப்படும் என்றார்.
பாஜக வேல் வைத்துக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் அரசியல் செய்வதாக சீமான் தெரிவித்துள்ளாரே? என கேட்டதற்கு சீமான் தான் வேலை தூக்கிக்கொண்டு திருச்செந்தூருக்கு சென்றார் என எச் ராஜா தெரிவித்தார்.
நேற்று கிறிஸ்மஸ் விழா நடைபெற்ற பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு எச். ராஜா சற்று கோபமாகி வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: “பாபர் மசூதியைப் போல் சிக்கந்தர் தர்காவிலும்”...எச்.ராஜா சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்... ஆடிப்போன திருப்பரங்குன்றம்...!