நான் கோட்டைக்கு செல்லும் இடமாக தான் சேர்ந்து இருக்கிறேன். எம்.ஜிஆர்., ஜெயலலிதா உடன் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். இப்போது மூன்றாவது தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
கோபியில் உள்ள தவெக அலுவலகத்தில் வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் தவெக பொறுப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது, 97 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டு உள்ளனர். 69 லட்சம் பேர் நீக்கப்பட்ட போது பீகாரில் பல போராட்டம் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அந்த பயணத்தை மேற்கொள்ள ஒவ்வொரு வாக்களர்களையும் உயிர் மூச்சாக கருதி, அவர்கள் காணும் கனவை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணியாக உள்ளது.
உங்களுடைய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல புதிய ரத்தமே இன்றைக்கு உள்ளங்களில் இருக்கிறது.
எதிர்கால தமிழகத்தை ஆளப்போகும், வெற்றி தளபதியை உருவாக்க இந்த பணிகளை செய்து வருகிறோம்.
எல்லோரும் சொன்னார்கள், செங்கோட்டையன் இங்கே சேர்ந்திருக்கிறார் என்று. நான் கோட்டைக்கு செல்லும் இடமாக தான் சேர்ந்து இருக்கிறேன். எம்.ஜிஆர்., ஜெயலலிதா உடன் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். இப்போது மூன்றாவது தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இதையும் படிங்க: “நிறுத்துய்யா... நிறுத்துய்யா...” - செங்கோட்டையன் வந்தா எழுந்துருச்சி ஓடனுமா? - செய்தியாளர் சந்திப்பில் டென்ஷன் ஆன திருநாவுக்கரசர்...!
தலைவரிடம் காணும் போது மகிழ்ச்சியை தந்த்து. மனம் திறந்து பேசினார். அப்படிப்பட்ட ஒரு தலைவரோடு் இணைந்து பணியாற்ற நான் கொடுத்து வைத்து இருக்கிறேன்.
வேறு இயக்கமாக இருந்தால் மக்களை தேடுஇ செல்ல வேண்டும். ஆனால் தேதியை கூறுங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் டைம் இருக்காம்... அதிமுக விருப்ப மனு..! கால அவகாசம் நீட்டிப்பு...!